ஜோதிகா தான் வேணும்!.. காதல் முற்றி சூர்யா அடம்பிடித்த படங்கள்..
தமிழ் சினிமாவில் பொறாமை படக்கூடிய நட்சத்திர ஜோடிகள் என்றால் அது சூர்யா - ஜோதிகா ஜோடிதான். நடிக்கும் போதெ காதலித்து 4 வருடங்கள் பெற்றோர்கள் சம்மதத்திற்காக காத்திருந்து அதன் பிறகு உறவினர்கள், நண்பர்கள் சூழ இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.
திருமணமாகி இவர்களுக்கு ஒரு மகளும் மகனும் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா நடிப்பதை குறைத்துக் கொண்டார். குழந்தைகளின் கல்வியில் கவனம் செலுத்தி வருகிறார். திருமணம் நிச்சயம் ஆனவுடன் கால்ஷீட் கொடுத்த அத்தனை படங்களையும் அவசர அவசரமாக நடித்து முடித்துக்
கொடுத்தார்.
அட்வான்ஸ் வாங்கிய படங்களுக்கு எல்லாம் திருமணம் தான் முக்கியம் என்று வாங்கிய அட்வான்ஸை எல்லாம் திருப்பி கொடுத்தார். இந்த நிலையில் சூர்யா எந்தெந்த படங்களுக்கு எல்லாம் ஜோதிகா தான் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் என்ற செய்தியை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் கூறினார்.
சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த ‘உயிரிலே கலந்தது’ படத்தில் அதன் தயாரிப்பாளர் ஏகப்பட்ட ஹீரோயின்களின் புகைப்படங்களை சூர்யாவிடம் காட்டியிருக்கிறார். ஆனால் புகைப்படங்களில் இருந்த அத்தனை ஹீரோயின்களையும் ஒதுக்கிவிட்டு ஜோதிகா தான் வேண்டும் என்று சொன்னாராம்.
அதன் பிறகு ‘ நந்தா’ படத்திலும் பாலாவிடம் ஜோதிகா நடித்தால் நன்றாக இருக்கும் என கூறினாராம் சூர்யா. ஆனால் பாலாவை பற்றி தான் தெரியுமே. அவர் முடிவெடுத்தால் போதும். உடனே இந்தக் கதைக்கு லைலா தான் செட் ஆவார் என்று பாலா சொல்லியிருக்கிறார். இருந்தாலும் ஜோதிகாவை கமிட் பண்ணுங்க என்று திரும்ப திரும்ப
சூர்யா சொல்ல ‘என்ன எதும் லவ் மேட்டரா?’ என்று பாலா கேட்டாராம்.
அதன் பிறகே இது எதுக்கு வம்பு என்று சூர்யா அமைதியாகி விட்டாராம். நந்தா படத்தை பார்த்து தான் கௌதம் மேனன் ‘காக்க காக்க’ படத்திற்காக சூர்யாவை அணுகியிருக்கிறார். அந்தப் படத்திற்கும் ஜோதிகா தான் வேண்டும் என்று சூர்யா சொல்ல அதன் மூலம் ஜோடி க்ளிக் ஆகி காதல் ஆகி திருமணமாகி செட்டிலாகி இருக்கிறது.
இதையும் படிங்க : அட்ஜெஸ்மெண்டா?.. முரளியால் தான் எனக்கு பிரச்சினை!.. ஓபன் டாக் கொடுத்த நடிகை..