சூர்யா நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அனைவருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.
அந்தப் படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கமிட் ஆனார் சூர்யா. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறார்கள். படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். அவர்களுடன் இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படம் ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.
ஆனால் படத்தின் ஓடிடி, சாட்டிலைட் என படத்திற்கு வியாபாரம் ஆகாததால் ரிலீஸ் தேதியில் இருந்து பின்வாங்கியது. ஒரு வழியாக இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இப்போது வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. சாட்டிலைட் உரிமையை ஜீ நிறுவனம் வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் ரிலீஸ் தேதி ஏப்ரல் என்றிருந்த நிலையில் மார்ச் 19 என லாக் செய்திருக்கிறது.
ஆனால் அந்த ரிலீஸ் தேதியிலும் இப்போது பிரச்சினை கிளம்பியிருக்கிறது. அதே மார்ச் 19ல் தான் அல்லுஅர்ஜூன் நடிக்கும் பெட்டி திரைப்படமும் நானி நடிக்கும் ஒரு படமும் ஹிந்தியில் ஒரு படமும் வெளியாகிறது. ஆரம்பகாலங்களில் ஒரு பெரிய நடிகரின் படம் வெளியாகிறது என்றால் தமிழில் வேறொரு நடிகரின் படம் ரிலீஸாகிறதா என்று மட்டும்தான் பார்ப்பார்கள்.
ஆனால் இப்போதைய சூழ் நிலையில் வேறு மொழிகளிலும் படங்கள் ரிலீஸ் ஆகிறதா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. இதற்கு காரணம் பேன் இந்தியா என்ற கலாச்சாரம்தான். அதனால்தான் மற்ற மொழிகளிலும் படங்கள் அதே தேதியில் ரிலீஸ் ஆகிறதா என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது.