வெற்றியை எதிர்பார்த்து அட்டர் ஃபிளாப் ஆன அந்த படம்!.. தோல்விக்கு காரணமாக இருந்த சூர்யா!..

by Rohini |   ( Updated:2022-12-15 03:04:58  )
surya_main_cine
X

surya

தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகர்களில் மிக முக்கிய இடத்தில் இருப்பவர் நடிகர் சூர்யா. சமீபகாலமாகவே அவர் நடிப்பில் வெளியான படங்களின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். ஹீரோவையும் தாண்டி ஒரு நிலையான அந்தஸ்திற்கு மக்களால் தள்ளப்படுகிறார் சூர்யா.

மேலும் ஆரம்பகாலங்களில் அவர் காட்டிய அக்கறை இன்றைய காலகட்டத்தில் மிக அதிகமாகவே இருக்கிறது என்றே கூறலாம். தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு படங்களிலும் அவரின் மெனக்கிடல்கள் அதிகமாகவே இருக்கின்றது. மேலும் சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலமும் பல தரமான படங்களை கொடுத்தும் வருகிறார் சூர்யா.

surya1_cine

surya

அவரின் நடிப்பில் மிகவும் எதிர்பார்த்த படம் என்றால் அது ‘மாற்றான்’ திரைப்படம் தான். கே.வி. ஆனந்த் இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான மாற்றான் படம் படு தோல்வி அடைந்தது. யாரும் எதிர்பார்க்காத அந்த தோல்வியால் சூர்யாவே அதிர்ச்சியில் இருந்திருப்பார்.

அந்த அளவுக்கு அந்த படத்தில் ஏகப்பட்ட மெனக்கிடுல்கள் இருந்தன. அந்த படத்தின் மிகப்பெரிய ப்ளஸே சூர்யா தான் என்று அப்போது வந்த விமர்சனங்கள் கூறின. இரட்டையர் வேடத்தில் தன் அசாத்தியமான நடிப்பை அற்புதமாக வெளிப்படுத்தியிருப்பார் சூர்யா.

இதையும் படிங்க : படமாகப் போகும் நடராஜன் பயோபிக்!.. புது யுக்தியை கையிலெடுக்கும் சிவகார்த்திகேயன்!.. வேற லெவல் போங்க..

இந்த படத்தின் தோல்வியால் அதிர்ந்து போன சகோதரர்கள் சுபா திரையரங்குகளில் ரசிகர்களின் காரணத்தை அறிய முற்பட்டிருக்கின்றனர். அவர்கள் சொன்ன காரணம் தான் சூர்யா தானாம்.

surya2_cine

surya

அதாவது முதல் பாதியில் சூர்யாவை இரட்டையர்களாக காட்டியவர்கள் மறுபாதியில் ஒரு சூர்யாவை மட்டும் காண்பித்தது தான் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மேலும் மறுபாதியில் வயலின் மட்டும் தான் வாசித்துக் கொண்டிருந்தீர்கள் என்றும் கூறியிருக்கின்றனர். அந்த அளவுக்கு படத்தின் கதையிலோ திரைக்கதையிலோ ஈர்க்கப்படாதவர்கள் சூர்யாவின் நடிப்பில் தான் ரசிகர்கள் ஈர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இதையும் படிங்க : நடிகைகளுக்கு அக்ரிமெண்ட் போட்ட எம்ஜிஆர்!.. அதை மீறிய நடிகை யார் தெரியுமா?..

அதன் பின் தான் சுபா சகோதரர்கள் ஸ்கீரின் ப்ளேவை பட முழுக்க இரட்டை சூர்யாவாக அங்கும் இங்குமாக காட்டியிருக்கலாமோ என்று
யோசித்தனராம்.

Next Story