Categories: latest news

சூர்யாவுக்கு எதிரா வெற்றிமாறன் செஞ்ச காரியம்! அடுத்து என்ன? வாடிவாசலுக்கு டாட்டாதான்..

Actor Surya: சமீப காலமாக பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் இந்த வருட இறுதியில் இருந்து அடுத்தடுத்து ரஜினி, கமல், விஜய், அஜித் என முழுவதும் இவர்களின் படங்கள் தான் ரிலீஸுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் வாடிவாசல். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஒரு பக்கம் வெற்றிமாறன் விடுதலை படத்திலும் சூர்யா கங்குவா திரைப்படத்திலும் பிசியாக இருந்ததனால் வாடி வாசலுக்கு கொஞ்சம் பிரேக் கொடுக்கப்பட்டது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் ஆசையை நிறைவேற்றிய சிவாஜி… இடையில் வந்த சிக்கல்… தீர்த்து வைத்த புரட்சித்தலைவர்..

இதற்கிடையில் கார்த்தி, அமீர், ஞானவேல் ராஜா இவர்கள் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்க இது வாடிவாசல் திரைப்படத்தையும் பாதிக்க ஆரம்பித்தது. ஏனெனில் சூர்யா குடும்பத்திற்கு எதிராக அமீர் திரும்ப வாடிவாசல் திரைப்படத்தில் அமீரும் இருப்பதால் சூர்யா இந்த படத்தில் நடிப்பாரா இல்லையா என்ற ஒரு சர்ச்சை எழுந்தது. இருந்தாலும் தொழில் வேறு சொந்த பிரச்சினை வேறு என சூர்யா பச்சைக்கொடி காட்டியதாக கூறப்பட்டது.

அதே சமயம் சூர்யாவுடன் நடிக்க நான் தயாராக இருக்கிறேன் என அமீர் தரப்பிலும் கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென வாடிவாசல் படத்தில் சூர்யா விலகுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதற்கு காரணம் வெற்றிமாறன் யாருக்கும் தெரியாமல் ஏன் சூர்யாவுக்கு கூட தெரியாமல் வாடிவாசல் கதையை ராம் சரனிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதையும் படிங்க: தீபாவளிக்கு ஸ்கெட்ச் போடும் விடாமுயற்சி… ஆனா கூட இத்தனை படம் போட்டிக்கு இருக்கே?

கதையை கேட்ட ராம்சரனுக்கு வாடிவாசல் கதை பிடிக்கவில்லையாம். அதனால் அவர் இந்த படத்தில் நடிப்பதாக இல்லை. இந்த விஷயம் சூர்யாவுக்கு தெரிய வர வெற்றிமாறன் மீது பெரும் அதிருப்தியில் இருக்கிறாராம் சூர்யா. அதனாலேயே இந்த வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பது சந்தேகம்தான் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு தரப்பு சமீப காலமாக வெற்றிமாறன் பல மேடைகளில் விஜயை மிகவும் சிலாகித்து பேசி வருவதும் சூர்யாவுக்கு கொஞ்சம் தர்ம சங்கடமாக இருப்பதாலும் மொத்தமாக இந்த வாடிவாசலுக்கு ஒரு கும்பிடும் போட்டு விடுவார் சூர்யா என்றே சொல்லப்படுகிறது.

Rohini

Recent Posts

கோபத்தில் விஜய் கன்னத்தில் அறைந்த எஸ்.ஏ.சி?!. பிரிவுக்கு இதுதான் காரணமா?..

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…

3 hours ago

kalidas 2 Review: காளிதாஸ் 2- திரைப்பட விமர்சனம்

பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…

4 hours ago

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

13 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

14 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

15 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

16 hours ago