சூர்யா நோ சொல்லி கோலிவுட்டில் ஹிட் அடித்த படங்கள்... என்ன காரணம் தெரியுமா?

by Akhilan |
சூர்யா நோ சொல்லி கோலிவுட்டில் ஹிட் அடித்த படங்கள்... என்ன காரணம் தெரியுமா?
X

தமிழ் சினிமா ஹிட் நாயகனாக இருக்கிறார் சூர்யா. பேக் டூ பேக் ஹிட் கொடுத்துக்கொண்டு இருக்கும் இவர் பல ஹிட் படங்களை நோ சொல்லிய வரலாறு இருக்கிறது தெரியுமா?

பையா:

கார்த்தி நடிப்பில் வெளிவந்த படம் பையா. லிங்குசாமி இயக்கத்தில் வெளியான இப்படம் காதல் கருவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது. கார்த்தி முன்னர் எல்லாமே ராவான கதையில் நடித்திருந்தார். ஆனால் இந்த வாய்ப்பு கார்த்திக்கு கிடைத்ததற்கு சூர்யா தான் காரணமாம். முதலில் இந்த கதையை லுங்குசாமி சூர்யாவிடம் தான் கூறி இருக்கிறார். அவரோ தான் நடிப்பதை விட கார்த்தி நடித்தால் நல்லா இருக்கும் எனக் கூறி அவரிடம் கதை கூற அனுப்பி இருக்கிறார். படமும் ஹிட்டானது.

துப்பாக்கி:

விஜய் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் துப்பாக்கி. இப்படத்தினை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி இருந்தார். ஆனால் முதலில் இப்படத்திற்கு சூர்யாவிடம் தான் கதை சொல்லப்பட்டது. ஆனால், அவரோ கஜினி வெற்றியை தொடர்ந்து ஏழாம் அறிவில் முருகதாஸுடன் இணைந்தார். ஆனால் அப்படம் ஓரளவு வசூல் மட்டுமே கிடைத்தது. அதனால் தான் முருகதாஸ் கூறிய துப்பாக்கி படத்திற்கு நோ சொல்லி இருக்கிறார்.

ஆசை:

சுவலட்சுமியுடன் தல அஜித் நடித்து அவருக்கு ஹிட்டான முதல் படம். இப்படத்தில் முதலில் சூர்யாவை தான் நடிக்க அணுகி இருக்கின்றனர். கதையை கேட்ட சூர்யா, எனக்கு இந்த கதை செட்டாகாது. அதனால் என்னால் பண்ண இயலாது என மறுத்து விட்டாராம்.

துருவ நட்சத்திரம்:

கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படப்பிடிப்பில் இருக்கிறது. இதில் விக்ரம் நாயகனாக நடித்து வருகிறார். முதலில் இப்படத்திற்கு ஜிவிஎம்மை நம்பி தான் சூர்யா ஓகே சொல்லிவிட்டாராம். படப்பிடிப்புகளும் நடைபெற இருந்த நிலையில், கதையை சொல்லுங்க சார் என சூர்யா முரண்பிடித்துள்ளார். ஆனால் இயக்குனரோ கதையா அது எங்க எங்கிட்ட இருக்கு ரீதியில் பேச ஜெர்கான சூர்யா டாடா பாய் என பறந்துவிட்டாராம்.

பிசினஸ்மேன்:

தெலுங்கில் மாஸ் ஹிட்டான படம் பிசினஸ்மேன். இப்படத்தின் மகேஷ்பாபு நடித்திருந்தார். படமும் ப்ளாக்பாஸ்டர் ஹிட் என்பது அனைவரும் அறிந்த சேதி. ஆனால் இப்படத்தின் கதையை முதலில் இயக்குனர் பூரி ஜெகன்நாத் சூர்யாவிடம் தான் கதையை கூறி இருக்கிறார். அவருக்கு கதை பிடித்தாலும், தான் தற்போது ஏழாம் அறிவு படப்பிடிப்பில் இருக்கேன். அது முடிந்ததும் எடுக்கலாம் எனக் கூறினாராம். ஆனால் ஜெகன்நாத்தோ எனக்கு உடனே படத்தை எடுக்க வேண்டும் எனக் கூறி சென்றுவிட்டாராம். இதை தொடர்ந்தே மகேஷ் பாபு இந்த படத்தில் கமிட்டாகி ஹிட் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: மகேஷ் பாபுவுக்கு இருக்கும் நல்ல மனசு கூட அஜித், விஜய்க்கு இல்லையே!.. என்ன மேட்டரு தெரியுமா?..

Next Story