சூர்யாவின் அந்தப் படம் டிராப் ஆனதற்கு நான் தான் காரணம்...! விக்ரம் படத்தின் மூலம் வச்சு செஞ்ச லோகேஷ்....
மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரின் படங்கள் எல்லாம் தனித்துவமான கதையம்சம் கொண்ட கதைகளை உள்ளடக்கியதாக இருக்கும். கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை நகர்த்துவதில் சாமர்த்தியசாலி லோகேஷ் கனகராஜ்.
இவர் அண்மையில் இயக்கியிருக்கும் படம் ’விக்ரமை’ எதிர்பார்த்து உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. கமல் நடிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒரு கேமியோ ரோலில் நடிக்க உள்ளாராம். ஏற்கெனவே லோகேஷ் சூர்யாவை வைத்து ‘இரும்புக் கை மாயாவி’ என்ற படத்தை எடுக்க திட்டமிட்டு இருந்தாராம்.
ஆனால் அந்த படம் அப்படியே ட்ராப் ஆனதாம். அதற்கு லோகேஷ் தான் காரணமாம். மாநகரம் படத்தை எடுத்து முடித்த கையோடு மிகப்பெரிய பட்ஜெட்டில் இரும்புகை மாயாவி படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் லோகேஷ் இப்பொழுது தான் மாநகரம் என்ற சின்ன படத்தை எடுத்துள்ளேன். இவ்ளோ பெரிய பட்ஜெட்டில் எடுக்க எனக்கு தற்பொழுது தைரியம் இல்லை. கொஞ்ச நாள் கழித்து திட்டமிடலாம் என கூறி விட்டாராம்.
அதை கருத்தில் வைத்துக் கொண்டுதான் விக்ரம் படத்தில் சூர்யாவை ஒரு ரோலில் நடிக்க வைத்துவிட வேண்டும் என எண்ணி இந்த கதாபாத்திரத்தில் சூர்யாவை நடிக்க வைத்துள்ளார் லோகேஷ். மேலும் அவரின் கதாபாத்திரம் சூர்யாவிற்கே இதுதான் முதல் தடவையாக இருக்கும், முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரமாக இருக்கும் என லோகேஷ் கூறினார். எல்லாம் முடிந்து மீண்டும் இரும்பு கை மாயாவி என்ற படத்தை விரைவில் தொடங்குவோம் என கூறினார்.