Categories: Cinema News latest news

தொடர் மாஸ் ஹிட் படங்களுக்கு தயாராகும் உச்ச நட்சத்திரங்கள்.. சூர்யா போடும் மாஸ்டர் ப்ளான்!..

தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு புது எனர்ஜி வந்துவிட்டது போல தொடர் வெற்றிகளை குவித்து வருகின்றனர். விக்ரம் படத்தினை வைத்து கமல் மிகப்பெரிய ஹிட்டினை கொடுத்தார். அதனாலேயே பெரிய நடிகர்கள் தங்கள் இயக்குனர்களை மேலும் மெருகேற்றினர்.

அவரை தொடர்ந்து விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு ஒருவாரியான வசூல் ஹிட்டினை கொடுத்தது. விக்ரம் வெற்றியே இதற்கும் காரணமாக சொல்லப்பட்ட நேரத்தில், ஜெய்லர் படத்துக்காக நெல்சனை அழைத்த ரஜினிகாந்த் படத்தில் சூப்பர்ஸ்டார்களை இணைக்க வைத்ததன் மூலம் பல மாற்றங்களை செய்தார்.

இதையும் படிங்க: குத்துங்க எஜமான் குத்துங்க!.. அவர் எப்பவுமே அப்படித்தான்!.. ஆந்திரா போயும் ஏழரை இழக்கும் ஷங்கர்..

இந்த செய்திகளால் சூர்யா தற்போது உஷாராகி இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கதை தேர்வில் செம தெளிவாக செயல்படும் சூர்யா தன்னுடைய அடுத்த படங்களில் கண்டிப்பாக லோகேஷ் ஒரு படத்தினை இயக்கி விட வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கிறார்.

இதையும் படிங்க: தளபதிக்கு வில்லனாகும் தல… அதிரவைக்கும் மாஸ் காம்போ… வெங்கட் பிரபு படத்தின் அதிரடி!

ஏற்கனவே சூர்யாவிற்காக எழுதப்பட்ட இரும்புக்கை மாயாவி படத்தின் கதை இன்னும் ப்ரெஷாக்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் விக்ரம் படத்தில் 10 நிமிடங்களுக்கு குறைவாக அவர் வந்த ரோலக்ஸ் பாத்திரத்தினை வைத்து முழு கதை ஒன்றினையும் லோகேஷ் சூர்யாவிற்கு கூறி இருக்கிறார்.

இதனால் தற்போது சூர்யா இரண்டையுமே ஓகே செய்து இருக்கிறாராம். விரைவில் இந்த இரு படத்தில் நடித்து விட்டால் தன்னுடைய மார்க்கெட் பெருமளவில் உயரும் என்று நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 

தற்போது கங்குவா ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் சூர்யாவும், லியோ படத்தினை முடித்து கொண்டு லோகேஷும் இணைவதற்கு கண்டிப்பாக அடுத்த வருடம் ஆகிவிடும் என்றாலும் லியோ ஹிட்டும், ரோலக்ஸின் தாக்கமுமே வரும் படத்திற்கு பெரிய வரவேற்பாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Akhilan