எல்லாம் அவங்க பண்ண வேலைதான்!..தனக்கு தானே வேலி போட்டுக் கொண்ட சூர்யா!..
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறிவருகிறார் நடிகர் சூர்யா. தேசிய விருது நாயகனாக சமூக நாயகனாக தான் நடிக்கும் படங்களின் மூலம் ஒரு பெரிய நிலையை அடைந்திருக்கிறார் என்றால் அவரின் அனுபவம் மற்றும் பக்குவம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆரம்ப காலங்களில் நடிக்கவும் தெரியாமல், நடனம் ஆடவும் தெரியாமல் வந்த சூர்யா இன்று கோடான கோடி ரசிகர்களை தன் வசப்படுத்தியிருக்கிறார். இவரின் நடிப்பில் வெளிவந்த சமீபகால படங்கள் எல்லாம் சமூகத்திற்கு ஒரு கருத்தை சொல்லுபவையாக அமைந்தன.
இதையும் படிங்க : கலைக்கட்டிய கோலிவுட்டின் புது காதல் ஜோடிகள்.. அடடா! என்னங்க கல்யாண சீசனா இது?
இந்த நிலையில் நடிகர் சூர்யா தனக்கு தானே ஒரு வட்டத்தை போட்டு அதில் இருக்கிறார் என்ற தகவல் வைரலாகி வருகின்றது. எப்பேற்பட்ட விருதுகள், ஆஸ்கார் விருதுகள் என அந்த அந்தஸ்தை பெற்றாலும் தமிழ் சினிமாவில் ரஜினி, கமலின் இடத்தை தனதாக்கி கொண்டு இருக்கின்றனர் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித். அவர்களை போல் உள்ள அந்தஸ்தை நம்மால் பெற முடியவில்லையே?
என்ற எண்ணத்தில் இருந்தாரோ இல்லையோ? முதலில் மீடியாக்களின் நண்பராக இருந்த சூர்யா பேர் புகழ் கிடைத்தபிறகு சில காலமாகவே மீடியாக்களை தவிர்த்து வருவதாகவும் சில தகவல்கள் வருகிறது. மேலும் தனது தொலைபேசி எண்ணையும் மாற்றி விட்டாராம். நீண்ட காலமாக வைத்திருந்த எண்ணை மாற்றி விட்டு தனக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும் படி புதிய தொலைபேசி எண்ணை வைத்திருக்கிறாராம் சூர்யா. இப்படி பண்ணலாவது நம்மை அன்னாந்து பார்ப்பார்கள் என நினைத்தாரோ தெரியவில்லை.