வாடிவாசலும் இல்ல! சுதா கொங்கரா ப்ராஜக்ட்டும் இல்ல - சூர்யாவின் அடுத்த டார்கெட் இதுவா?
தமிழ் சினிமாவில் ஒரு தனிப்பெரும் நடிகராக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா என்ற வரலாற்று படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். அதற்காக கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கடும் உழைப்பில் இருக்கிறார். 10 மொழிகளில் தயாராகி வரும் கங்குவா திரைப்படம் ஒரு பேன் இந்தியா திரைப்படமாக வளர இருக்கிறது.
அனேகமாக அடுத்த வருடம்தான் இந்தப் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா தன்னுடைய அகரம் அறக்கட்டளை சார்பில் பல உதவிகளையும் செய்து வருகிறார். சமீபத்தில் கூட அது சம்பந்தமான விழா சென்னையில் நடைபெற்றது. அதாவது அறக்கட்டளை ஆரம்பித்து 40 வருடங்களை நிறைவு செய்தததை அடுத்து சிவக்குமாருக்கு பாராட்டு விழா மாதிரி ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க சூர்யா மற்றும் அவர் குடும்பத்தார் ஒட்டுமொத்தமாக மும்பைக்கே செட்டிலாகி விட்டனர். அதற்கு காரணங்கள் பல இருந்தாலும் முக்கியமாக ஜோதிகா ஹிந்தியில் படங்களில் நடிக்க இருப்பதால் மும்பைக்கு செட்டிலாகி விட்டார் என்று கூறப்படுகிறது. அது உண்மையாகிற விதமாக ஹிந்தியில் ஒரு வெப் சீரிஸில் ஜோதிகா நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க : ‘ஹுக்கும்’ பாடலால் தான் யாரென்பதை நிரூபித்த ரஜினி! இது கோபத்தின் வெளிப்பாடுதான்! பத்திரிக்கையாளர் பரபரப்பு பேட்டி
அதுமட்டுமில்லாமல் கங்குவா திரைப்படத்திற்கு பிறகு சூர்யாவும் ஹிந்தியில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான 2டி மூலம் படங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட போகிறாராம். அதன் பிறகு தான் வாடிவாசல் படத்தின் படப்பிடிப்பில் ஈடுபடுவாராம்.
வாடிவாசல் முடிந்த பிறகு சுதா கொங்கரா எடுக்கும் படத்திலும் இணைவாராம். ஆனால் முதலில் ஹிந்தியில் பல படங்களை தயாரிக்கும் எண்ணத்தில் தான் சூர்யா இருக்கிறாராம். அதன் விளைவுதான் மும்பை செட்டிலானது என செய்யாறு பாலு கூறினார்.