சூர்யா போனால் என்ன!.. வணங்கான் இன்னும் உசுரோட தான் இருக்கு.. பாலாவின் அடுத்த டார்கெட் இந்த நடிகரா?..
இப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது வணங்கான் படத்தின் படப்பிடிப்பு செய்தி. நேற்று திடீரென்று இயக்குனர் பாலா ஒரு அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கத்தின் மூலம் பகிர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரசிகர்கள் கொஞ்சம் வருத்தத்தில் தான் இருந்தார்கள்.
நந்தா, பிதாமகன் என முற்றிலும் வித்தியாசமான கதையில் சூர்யாவை வெற்றி நாயகனாக காட்டிய பாலாவின் இயக்கத்தில் மறுபடியும் சூர்யா இணைகிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்து வணங்கான் படத்தை பற்றி அறிய ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இதனிடையில் சின்ன சின்ன பிரச்சினைகள் எழுந்த வண்ணம் இருந்தன. ஒரு வழியாக இயக்குனர் பாலாவே வணங்கான் படத்தின் கதைக்கு சூர்யாவின் கதைபாத்திரம் சரியாக வராது எனவும் அவர் இந்த கதையில் இருந்து விலகுகிறார் எனவும் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மேலும் நந்தாவின் நான் பார்த்த சூர்யா பிதாமகனில் நீங்கள் பார்த்த சூர்யாவை இன்னொரு கதையின் மூலமாக இருவரும் வெளிப்படுத்துவோம் என்று அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் வணங்கான் படத்தில் இருந்து சூர்யாதான் விலகுகிறாரே தவிர கதை இன்னும் அப்படியே தான் இருக்கிறது. ஒரு வேளை அந்த கதை மறுபடியும் புத்துயிர் பெறுமானால் சூர்யாவிற்கு பதில் அந்த படத்தில் நடிகர் அதர்வா நடிப்பதற்கு வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க :ராதிகாவின் படப்பிடிப்பை நிறுத்திய எம்ஜிஆர்!.. ஹோட்டலில் செய்த அலப்பறையால் திக்குமுக்காடிய படக்குழு!..
ஏற்கெனவே பாலாவின் இயக்கத்தில் பரதேசி என்ற படத்தில் அதர்வா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி அவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது என்றும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. சூர்யாவை வைத்து 2டி நிறுவனம் தான் வணங்கான் படத்தை தயாரிக்கிறது என்று இருந்த சமயத்தில் இப்போது சூர்யா விலகியிருப்பதால் மீண்டும் அந்த படத்தை யார் தயாரிப்பார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சொல்லமுடியாது பாலாவிற்கு இருக்கும் சொத்துக்களை பார்த்தால் அவரே தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது என்று கோடம்பாக்கத்தில் கூறிவருகிறார்கள்.