சூர்யாவின் கதைக்கு இடைஞ்சலான தனுஷ்...! நாகரீகமாக ஆதங்கத்தை வெளிப்படுத்திய ரோலக்ஸ்....

தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத நடிகராக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. ஆஸ்கார் நிறுவன கமிட்டியில் உறுப்பினராக வாய்ப்பு, தற்போது சூரரை போற்று படத்திற்காக தேசிய விருது போன்ற பெருமைக்கு சொந்தக்காரராக வளர்ந்து நிற்கிறார்.
ரோலக்ஸில் ஆரம்பித்த ரசிகர்களின் கொண்டாட்டம் அடுத்தடுத்து இவர் அடைந்த வளர்ச்சிகளையும் சேர்த்து கொண்டாடி வருகின்றனர். மேலும் சூர்யாவை பற்றி ஆரம்ப முதலே கவலை பட்டுக் கொண்டிருந்த அவரது பெற்றோரை இன்று பெருமை படுத்தியுள்ளார் என்றே கூறலாம்.
இந்த நிலையில் பாலாவுடனான ஒரு புதிய படம், வெற்றிமாறனுடான வாடிவாசல் மற்றும் சில படங்களில் பிஸியாக
இருக்கிறார் நடிகர் சூர்யா. வெற்றிமாறனை பற்றி ஒரு பேட்டியில் பேசிய சூர்யா என்னிடம் நிறைய கதைகளை கூறியுள்ளார்.
கதை கூற வரும்போதெல்லாம் இந்த கதை தனுஷுக்காக எழுதியது, இந்த கதையில் தனுஷ் நினைத்து எழுதினேன்,
இந்த கதையை முதலில் தனுஷிடம் தான் கூறினேன் என்று ஒவ்வொரு தடவையும் கூறியே கடைசியாக இந்த கதையை கூறியுள்ளார் என்று சூர்யா தெரிவித்தார்.இதன் மூலம் ஒரு இயக்குனர் ஒரு நடிகரை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என தெரிந்து கொண்டேன் எனவும் தெரிவித்தார்.