
Cinema News
கொடுமையிலும் கொடுமை…! பொறுக்க முடியாமல் பேக் அப் செய்த சூர்யா…! ஓடவிட்டு வேடிக்கை பார்த்த படக்குழு…!
நடிகர் சூர்யா , இயக்குனர் பாலா கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் சூட்டிங் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை பற்றிய தகவல்கள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கின்றன.
அண்மையில் ஒரு செய்தி என்னவென்றால் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் கடுமையான மோதல் என்ற செய்தி பரவியது.அதன்பின் இல்லை பாலா வீட்டில் ஒரு விசேஷம் அதனால் பேக் அப் செய்தோம் என்ற தகவல் வந்தது. ஆனால் உண்மையில் என்ன நடந்தது என படக்குழுவில் தொடர்புடைய ஒரு நெருங்கிய நண்பர் தெரிவித்தார்.
அவர் கூறுகையில் சூட்டிங் கன்னியாகுமரியில் நடத்தும் போது கடுமையான வெயில், அந்த நேரத்தில் ஒரு ஷேசிங் சீனில் சூர்யா ஓடுவது போன்ற காட்சி படமாக்கிக் கொண்டிருந்தார்களாம். அந்த ஒரு காட்சியை காலையில் இருந்து மதியம் வரை எடுத்துக் கொண்டிருந்தார்களாம். அதுவரைக்கும் அந்த ஒரு காட்சியில் சூர்யா ஒடுவது போன்ற காட்சி மட்டுமே இருந்ததால் மதியம் வரைக்கும் ஓடிக்கொண்டே இருந்தாராம்.
ஆனால் பாலாவுக்கு திருப்தி இல்லையாம். கடுப்பாகி போன சூர்யா நேராக வந்து காரில் ஏறி சென்று விட்டாராம். மதியம் 3 மணி வரைக்கும் காத்திருந்தார்களாம். சூர்யா வரவே இல்லையாம்.அடுத்து போன் செய்து சூர்யாவிற்கு வயிற்றுவலி என்ற தகவல் வந்ததாம். மாலை வரைக்கும் வராததால் ஓகே பேக் அப்னு கிளம்பி விட்டார்களாம். இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த சூட்டிங் 15ஆம் தேதியில் இருந்து தொடங்க உள்ளதாம். கோவாவில் படமாக்கப் போகிறார்கள்.படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கும் சூர்யாவிற்கு ஒரு கதாபாத்திரத்திற்கு நடிகை ஜோதிகா ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகியது.