மிகவும் இளமையாக பழைய லுக்கில் சூர்யா.. வைரலாகும் புகைப்படம்!

by ராம் சுதன் |
surya
X

தமிழ் சினிமாவில் தனக்கென தனியாக ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் நடிகர் சூர்யா. தமிழ் சினிமாவில் நேற்று வந்த நடிகர்களெல்லாம் தங்கள் பெயருக்குப் பின்னால் பட்டம் சூட்டிக்கொண்ட நிலையில் சூர்யா மட்டும் பட்டம் ஏதும் வேண்டாம் என மறுத்து நடித்து வருகிறார்.

சிங்கம் 2 படத்திற்குப் பின் இவர் நடித்த எந்தப்படமுமே பெரிய வெற்றியைப் பெறவில்லை. கடந்த சில வருடங்களாக வெற்றிப்படம் ஏதும் கொடுக்காமல் தவித்து வந்த இவருக்கு, கடந்த ஆண்டு இறுதியில் வெளியான 'சூரரைப்போற்று' படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.

இப்படி ஒரு நல்ல படத்தை ஓடிடி-யில் வெளியிட்டதற்கு பதிலாக காத்திருந்து தியேட்டரில் வெளியிட்டிருக்கலாம் என்பதுதான் சினிமா ரசிகர்களின் ஏக்கம். இப்படத்தையடுத்து தனது இரண்டாவது இன்னிங்க்சை துவங்கியுள்ள சூர்யா பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதுமட்டுமின்றி அறிமுக இயக்குனர் ஞானவேல் இயக்கும் 'ஜெய்பீம்' என்ற படத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார்.

இப்படத்தை தன சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டெர்டைன்மெண்ட் மூலம் தயாரித்து வருகிறார். சமீபத்தில், இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தீபாவளியன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

surya

surya

இந்நிலையில், இன்று நடிகர் சூர்யாவின் தந்தை சிவகுமாருக்கு பிறந்தநாள். இதை முன்னிட்டு சிவகுமார் குடும்பத்தினர் அனைவரும் புகைப்படம் எடுத்துள்ளனர். அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதில் சூர்யா பார்ப்பதற்கு வித்யாசமாக மிகவும் இளமையாக உள்ளார். சூர்யா ரசிகர்கள் இந்தப் புகைப்படத்தை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Next Story