சமீபத்தில் சூர்யா நிகழ்த்திய சாதனை...! ஒரு ரோலக்ஸ் வாட்ச்சால் அவருடைய நேரமே தலைகீழா மாறிடுச்சி...
தமிழ் சினிமாவில் மிகவும் தேடப்படும் நடிகராக மாறிவிட்டார் நடிகர் சூர்யா. விக்ரமில் அந்த 10 நிமிட காட்சிகளால் இவருக்கு வந்த வரவேற்புகள் அவரையே பிரமிக்க வைத்து விட்டன. அதுவும் கமல் உடன் சேர்ந்து ரோலக்ஸ் என்ற கதாபாத்திரம் வாங்கி கொடுத்த பெயர் என்றைக்கும் இவரது பெருமையை பறைசாற்று விதமாக அமையும் என்பதில் ஐயமில்லை.
மேலும் இவர் சமூக ஊடங்கங்கள் வாயிலாக தன்னுடைய அன்றாட நிகழ்வுகள் , நடப்புகள் குறித்து அவ்வப்போது செய்திகளை புகைப்படங்கள் வாயிலாக பகிர்ந்து வருகிறார். அதில் கமல் கொடுத்த ரோலக்ஸ் வாட்சை புகைப்படம் எடுத்து கமலுடன் சேர்ந்தும் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டார்.
அந்த புகைப்படத்திற்கு எக்கச்சக்கமாக லைக்ஸ்-கள் குவிந்தன. கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் லைக்குகளை தாண்டி இந்த மிகப்பெரிய மைல்கல்லை எட்டிய முதல் கோலிவுட் நடிகர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் நடிகர் சூர்யா.இன்ஸ்டாகிராமில் சூர்யாவை 4.7 மில்லியன் பின்தொடர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தொடர்ந்தும் சூரரைப் போற்று ரீமேக் ஹிந்தியிலும் அக்ஷய் குமாருடன் சூர்யா ஒரு கேமியோ ரோலில் களம் இறங்குகிறாராம். மேலும் மாதவன் நடிக்கும் ராக்கெட்டரி படத்திலும் ஒரு காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்ற இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.