வணங்கானில் பட்ட அடி சாதாரண அடியா? சுதா கொங்கராவை அலைய வைக்கும் சூர்யா
Surya: பெரும் எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் புறநானூறு. சூரரைப் போற்று என்ற மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு மீண்டும் சுதா கொங்கராவும் சூர்யாவும் இணைந்து ஒரு படத்தை கொடுக்கப் போகிறார்கள் என அறிந்ததுமே ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பினை வைத்திருந்தார்கள். படத்தின் டைட்டில் டீசரும் வெளியாகி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்திருந்தது.
ஆனால் திடீரென புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகுவதாக ஒரு செய்தி வெளியாகி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது .புறநானூறு திரைப்படத்தைப் பொறுத்தவரைக்கும் இந்த படம் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாக வைத்து உருவாகும் திரைப்படமாக இருப்பதால் அந்த படத்தில் இருந்து சூர்யா விலகுவதாக தகவல் வெளியானது.
ஏற்கனவே இந்த படத்தை சூர்யாவின் 2d நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இப்போது 2டி நிறுவனமும் அதிலிருந்து விலகி இருக்கிறது. சூர்யா படத்திலிருந்து வெளியேறியதும் சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக ஒரு செய்தி வெளியானது. ஒருவேளை புறநானூறு திரைப்படத்தை தான் சுதா கொங்கரா சிவகார்த்திகேயனை வைத்து எடுக்கப் போகிறாரா என்ற ஒரு கேள்வியும் இருந்து வந்த நிலையில் அதே கதை தான். ஆனால் டைட்டில் மட்டும் மாற்றி வைப்பதாக சொல்லப்பட்டது.
சுதா கொங்கரா சிவகார்த்திகேயன் இணையும் இந்த படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனம் இப்பொழுது மாறி உள்ளதால் சூர்யாவிடம் இருந்து என்ஓசி பெற்றால்தான் இந்த படம் அடுத்து டேக் ஆஃப் ஆகும். ஆனால் சூர்யாவை பொருத்தவரைக்கும் சுதா கொங்கராவுக்கு என்ஓசி கொடுக்க தயங்குகிறாராம்.
அதற்கு 20 லட்சம் கேட்பதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஏனெனில் படத்தின் ப்ரீ புரோடக்ஷன் மற்ற வேலைகள் எல்லாம் சூர்யா அந்த படத்தில் இருக்கும்போதே நடந்த நிலையில் அதற்கான செலவு இதையெல்லாம் மனதில் வைத்து தான் சூர்யா தரப்பில் இருந்து இப்படி ஒரு தொகை கேட்பதாக சொல்லப்படுகிறது .
அதுவும் போக ஏற்கனவே வணங்கான் திரைப்படத்தில் சூர்யா இருந்து அவர் விலக அந்த படத்தையும் அவருடைய நிறுவனம்தான் ஆரம்பத்தில் தயாரிப்பதாக இருந்தது. அதற்கும் ஒரு எட்டு கோடி ரூபாய் சூர்யா செலவழித்ததாக கூறப்பட்டது. அதுவும் இன்னும் சூர்யா கைக்கு வரவில்லை.
இதையும் விட்டுவிட்டால் இருக்கிற பணமெல்லாம் இப்படியே போய்விடும் என்ற காரணத்தினாலேயே சூர்யா சுதா கொங்கராவுக்கு இப்படி ஒரு செக் வைத்திருக்கிறார்.