ரெட்ரோ படத்தில் சர்ச்சையான விஷயம்?!. ஐய்யய்யோ ஏழரைய இழுப்பாங்களே!….

Retro: சினிமா ,முன்பு போல் இல்லை. இப்போது சாதி, மத, இன ரீதியாக பல இயக்கங்களும், குழுக்களும் வந்துவிட்டது. தேவர் மகன், சின்னக் கவுண்டர் போல சாதி பெயரை வைத்து இப்போதெல்லாம் படம் எடுக்க முடியாது. ஜெய்பீம் படத்தில் ஒரு காட்சியில் காட்டப்படும் காலண்டரை வைத்து அரசியல் செய்தார்கள்.
மணிரத்னம் இயக்கிய பாம்பே படத்தை இப்போது எடுத்தால் தியேட்டரை எரித்துவிடுவார்கள் என அப்படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த ராஜீவ் மேனனே சொல்லியிருந்தார். அந்த அளவுக்கு இந்தியாவில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. ஒரு சின்ன வசனத்திற்காக கூட படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். சென்சார் ஆகி வெளிவந்த படங்களுக்கு மதரீதியான குழுக்கள் பிரச்சனை செய்யும் வினோதமெல்லாம் இந்தியாவில் அதிகரித்துவிட்டது.
ஒருபக்கம், ஒரு விஷயத்திற்கு ஒரு நடிகர் கருத்து சொன்னால் அது பிடிக்காதவர்கள் அந்த நடிகர் மீது தொடர்ந்து வன்மதை கக்க துவங்கிவிடுகிறார்கள். நடிகர் சூர்யா பாஜக அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக கருத்துசொன்னார். அவரின் மனைவி ஜோதிகா ‘கோவில்களை போல அரசு பள்ளிகளையும் சுத்தமாக வைத்துகொள்வோம்’ என பேசினார். அவ்வளவுதான். ஒரு குரூப்புக்கு அவர்கள் இரண்டு பேரும் எதிரிகளாகி விட்டார்கள்.

அந்த குரூப் சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து சூர்யாவையும், ஜோதிகாவையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சூர்யாவின் கங்குவா படம் வெளியானபோது படத்திற்கு எதிராக அதிகப்படியான வன்மத்தை கக்கினார்கள். இது படம் தோல்வி அடைய முக்கிய காரணமாக அமைந்தது.
தற்போது கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படம் வருகிற மே 1ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தில் இலங்கை தமிழர்களை நெகட்டிவாக காட்டுவது போல காட்சிகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே அப்படி கட்சி இருக்கிறதா என்பது படம் வெளியாகும்போதுதான் தெரியவரும். ஆனால், இப்போது சிலர் வன்மத்தை கக்க துவங்கிவிட்டனர்.
கார்த்திக் சுப்பாராஜ் ஏற்கனவே இயக்கிய ஜகமே தந்திரம் படத்திலேயே லண்டனில் இலங்கை தமிழர்கள் பற்றி சில காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது. ரெட்ரோ படம் வெளிவந்த பின்னரே இதற்கான பதில் தெரியவரும்.