சூர்யாவுக்கு ரோலக்ஸ் ரோல் செட்டே ஆகல!....ரசிகர்கள் சொல்றத கேளுங்க...(வீடியோ).....
’விக்ரம்’ படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் வெளியான நாள் முதலெ இன்று வரை ரசிகர்களின் ஆரவாரத்திற்கு எல்லையில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் விக்ரம்.
லோகேஷ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில், நரேன், சூர்யா உட்பட பலரும் நடித்திருக்கும் இப்படத்தில் அனிருத் இசையில் படம் பட்டையை கிளப்பி வருகிறது. அவரது மியூசிக்கில் ஒவ்வொரு காட்சியும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
சந்தனமாக விஜய் சேதுபதி, அமீராக பகத் பாசில் போன்றோர் நிலைத்து நிற்கின்றனர். மேலும் சின்ன ரோலில் வந்து கலக்கிய மற்ற நடிகர்களும் திறம்பட நடித்துள்ளனர். இந்த படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் நம் மனதில் ஆழமாக பதிந்துள்ளனர். டீனாவாக நடித்த டான்ஸ் மாஸ்டர் வசந்தி உட்பட ரசிகர்களை உறையவைத்தார்.
இந்த நிலையில் கடைசி நேரத்தில் வந்தாலும் பெரும்பாலும் இந்த படத்தில் பேசப்படும் கதாபாத்திரமாக மாறிய சூர்யா ரோலக்ஸாக நடித்திருப்பதை எங்களால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என படம் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். சூர்யாவை எங்களில் ஒருவராக பார்த்து வருகிறோம். ஹீரோவாகவே பார்த்து பழகி விட்டோம். இப்படி ஒரு நெகடிவ் கதாபாத்திரத்தில் அவரை பார்க்க முடியவில்லை என சூர்யா ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.