ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம்..! வெறும் அந்த நிமிட காட்சிக்காக...அசந்திருவீங்க..
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சக்க போடும் படம் விக்ரம். படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் இயக்குனர் செதுக்கியிருக்கிறார் என்று தான் கூற வேண்டும். மேலும் முதல் பாதி வேற லெவல், இரண்டாம் பாதி ஹாலிவுட் ரேஞ்ச் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
படத்திற்கு முக்கியமான புள்ளி அனிருத் பிஜிஎம்மில் பட்டையை கிளப்பியுள்ளார். வில்லனாக விஜய் சேதுபதி மாஸ் செய்துள்ளார் என ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ரசிகர்கள் ரசித்துள்ளனர். இந்த நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா நடித்திருப்பதை சஸ்பென்சாக வைத்திருந்தனர் படக்குழு.
படத்தில் சூர்யாவின் என்ரியை பார்த்து ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு அளவில்லாமல் போனது. ஜெய்பீமில் பார்த்த சூர்யாவா இது ? என வாயடைக்க வைத்து விட்டார் இயக்குனர். ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் வரும் சூர்யாவின் அந்த 20 நிமிட காட்சிக்கு தியேட்டரே மிரண்டு விட்டது.
இந்த காட்சிக்காக சூரியாவின் சம்பளம் பற்றிய செய்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. விக்ரம் படத்தின் மையப்புள்ளியாக வசுல் வேட்டைக்கு காரணமாக இருக்கும் இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்காக சூர்யா சம்பளம் எதும் வாங்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. மனுஷன் இந்த அளவுக்கு உயிர கொடுத்து நடித்து சம்பளம் வாங்கவில்லை என்று கேள்வி பட்டதும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அவர் மேல் உள்ள மரியாதை இன்னும் கூடியுள்ளது என்றே சொல்லலாம்.