உங்க மன தைரியத்தை பாராட்டியே ஆகணும் சூர்யா சார்… இணையத்தில் வச்சி செய்து வரும் ரசிகர்கள்.!

Published On: August 17, 2022
| Posted By : Manikandan

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘வணங்கான்’ திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘2டி என்டேர்டைன்மெண்ட்’ சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில், இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு அண்மையில் கன்யாகுமரியில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கான கதை இன்னும் ரெடியாகவில்லை என்பதால், சூர்யா தற்போது சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

 

புது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்டுகிறது. இதனை தொடர்ந்து, இணையத்தில் புது  தகவல் ஒன்று தீயாக பரவி வருகிறது. அதாவது, இவரது தம்பியான நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான விருமன் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்களேன் – இவளோ நாள் எங்கய்யா இருந்தீங்க..?! இணையத்தில் கமல்ஹாசன் – ஷங்கர் செய்த செயலால் அதிர்ந்து போன ரசிகர்கள்.!

இதற்கிடையில், சூர்யா தற்போது விருமன் பட இயக்குனர் முத்தையாவிடம் ஒரு புது கதை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், விருமன் படம் விமர்சனம் ரீதியாக  வரவேற்பு பெறவில்லை என்பதால், சூர்யா முத்தையாவுடன் அடுத்து கூட்டணி வைப்பது குறித்து நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் மன வேதனையுடன் வேண்டாம் என்று கோரிக்கை வைத்து வருகிறார்கள்.