Cinema News
சூர்யா – சிறுத்தை சிவா எடுக்கும் பெரிய ரிஸ்க்…! அண்ணாத்த கதைக்கு முக்கியத்துவம் கொடுங்க…
சூர்யாவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் கிடக்கும் படங்கள் வணங்கான், வாடிவாசல் போன்ற படங்கள் வரிசையில் இருந்தன. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நீண்டு கொண்டே போவதால் சூர்யா சிறுத்தை சிவாவுடன் இணைந்து தனது 42 வது படத்தின் வேலைகளில் பிஸியாகி விட்டார்.
இந்த படத்திற்காக பூஜைகள் அண்மையில் போடப்பட்டு அது சம்பந்தமான புகைப்படங்கள் கூட சமூக வலைதளங்களில் பரவியது. படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளார். மேலும் இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகவுள்ளதாக படக்குழு தெரிவித்தது.
இதையும் படிங்கள் : என் திரைப்பட வாழ்க்கையில் சிம்புதான் பெஸ்ட்!… அடடே அவரே பாராட்டிட்டாரே!….
பிரச்சினையே அங்கு தான் ஆரம்பமாகிறது. இதுவரை நேரிடையான தமிழ் படங்கள் 3டி யில் தயாராகி வெளியானது இல்லை. ஒரு சில டப் தமிழ் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதுவுமே ரசிகர்கள் மத்தியில் அந்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை என்றே தான் கூற வேண்டும்.
அதுவும் ஒரு முன்னனி ஹீரோவை வைத்து இப்படி ஒரு ரிஸ்க் எடுப்பது சரிதானா என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர். அது மட்டுமில்லாமல் தமிழ் ரசிகர்களின் ரசனையே வேறுமாதிரியானவை. அவர்களுக்கு இந்த 3டி தொழில்நுட்பம் சரிவருமா என்றெல்லாம் பேசிவருகின்றனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு சிறுத்தை சிவா வழக்கமான முறையை பயன்படுத்தினாலே போதும் என கூறிவருகின்றனர் சிலர்.