காப்பியடித்து எடுக்கப்பட்ட படம்.... இயக்குனரை வெளுத்தெடுத்த சூர்யா

by adminram |   ( Updated:2021-10-11 04:56:43  )
surya
X

என்னதான் புதுசா புதுசா படங்கள் வந்தாலும், வேறு மொழியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படங்களை தமிழ் மொழியில் ரீமேக் செய்தும் வருகிறார்கள். ரீமேக் என்றால் அந்த படக்குழுவினரிடம் முறையாக அனுமதி பெற்று அதற்கான தொகையை செலுத்தி அதன் பின்னரே அந்த படத்தை ரீமேக் செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் அந்த கதையை காப்பி அடித்து அனுமதி பெறாமல் எடுப்பது தவறான செயலாகும்.

அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. அதுவும் பிரபல நடிகர் சூர்யா படமாகும். அதாவது அவர் நடிப்பில் வந்த படமல்ல அவர் தயாரிப்பில் வந்த படம். நடிகர் சூர்யா படங்களில் நடிப்பது மட்டுமின்றி 2டி எண்டெர்டெயின்மெண்ட் எனும் நிறுவனம் மூலமாக பல படங்களை தயாரித்தும் வருகிறார். இதுவரை இந்த நிறுவனம் மூலம் பல படங்கள் வெளியாகி உள்ளன.

raman aandalum ravanan aandalum

அந்த வகையில் சமீபத்தில் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான படம் தான் ராமே ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும். மிகவும் சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இப்படத்தை இயக்குனர் அரிசில் மூர்த்தி எழுதி இயக்கியிருந்தார். ரசிகர்கள் மத்தியிலும் இப்படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு மராத்தியில் வெளிவந்த ரங்கா படாங்கா படத்தின் கதையை அப்படியே காப்பியடித்து எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. சூர்யாவின் தயாரிப்பில் வெளியான ஒரு படம் இவ்வாறு காப்பி அடித்து எடுக்கப்பட்ட படம் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் இது சூர்யாவுக்கு முன்னதாகவே தெரியாதாம். எனவே விஷயம் தெரிந்ததும் இயக்குனர் அசிரில் மூர்த்தியை நேரில் அழைத்து பயங்கரமாக கண்டித்தள்ளார். அதுமட்டுமின்றி சம்பந்தபட்ட மூலப்படத்தை எடுத்தவர்களுக்கும் இழப்பீடு வழங்கியுள்ளாராம்.

Next Story