நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஹரி கூட்டணியில் உருவான ஆறு, வேல் திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் மூன்றாவது முறையாக இணைந்த திரைப்படம் தான் சிங்கம். இந்த திரைப்படம் தமிழ் சினிமா மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மிக பெரிய வெற்றியை கொடுத்தது.

Also Read
இதனை தொடர்ந்து, சிங்கம் 2, சிங்கம் 3 என இவர்களது வெற்றி கூட்டணியில் மொத்தம் 5 திரைப்படங்கள் வெளிவந்தது. அதனபிறகு, 6 வது முறையாக மீண்டும் சூர்யாவை இயக்குனர் ஹரி’அருவா’ திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டதாக அறிவிக்கப்பட்டது. சில காரணங்களால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை நாயகனாக வைத்து யானை திரைப்படத்தை இயக்கினார், இப்படமும் வெளியாகி நல்ல வரவேற்பு அடைந்து தனது பானையில் எடுத்ததால் விமசர்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்று வருகிறார்.
இதையும் படிங்களேன் – நயன்தாராவை கழட்டி விட்ட விக்னேஷ் ஷிவன்.?! காரணம் ‘அந்த’ ஒரு ஹீரோ தான்…

தற்போது, நடிகர் சூர்யா இயக்குனர் யானை வெற்றியை தொடர்ந்து ஹரி உடன் விரைவில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, சூர்யாவுக்கு சொன்ன ‘அருவா’ படத்தின் கதையை மீண்டும் சூர்யா தரப்பு கேட்டுள்ளனர். இத வச்சி பார்க்கும்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு வரும் காலங்களில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், ‘யானை’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. ஏற்கனவே 5 படம் செய்துள்ளோம், 6 வது படம் செய்ய மாட்டோமா.? அருவா படம் சில சூழ்நிலை காரணமாக அப்படியே இருக்கிறது. விரைவில் ஆறாம்பித்து விடுவோம் என்று கூறியது குறிப்படத்தக்கது.




