எதிர்பாக்கலல.. இப்படி வருவேனு எதிர்பாக்கலல!.. சூர்யாவின் கெரியரில் திருப்புமுனையாக அமைந்த 10 படங்கள்!!..

surya
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. ஆனால் இவர் சினிமாவில் நடிக்க வந்ததே ஒரு விபத்து தான். சினிமாவில் நடிப்பதற்கு முன் சூர்யா திருப்பூரில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். அதன் பிறகே எதேச்சையாக நடிக்க வந்தார். ஆனால் சினிமாவில் நடிப்பதற்கு உண்டான எந்த தகுதியும் இல்லாமல் தான் வந்தார் சூர்யா. நடிக்கவும் தெரியாமல் நடனமும் தெரியாமல் வந்தவர் தான் சூர்யா.வந்த புதிதில் மிகவும் சிரமப்பட்டிருக்கிறார்.

தனது முதல் படமான ‘நேருக்கு நேர்’ படத்தில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றார். அந்த படத்திற்கு பிறகு ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படம் அவரின் கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. தனது காதல் மனைவியான ஜோதிகாவுடன் முதன் முதலில் சேர்ந்து நடித்த படமாக அமைந்தது.

அதன் பின் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலை நாட்டிய படம் ‘ நந்தா’ திரைப்படம். இந்தப் படத்தில் யாரும் எதிர்பார்க்காத நடிப்பையும் ஒரு ஆக்ஷன் காட்சிகளில் தத்ரூபமாகவும் நடித்தார். இந்தப் படமும் சூர்யாவின் கெரியரில் முக்கிய படமாக அமைந்தது. இதனை அடுத்து ‘காக்க காக்க’ திரைப்படம்.

இந்த படத்தில் மீண்டும் ஜோதிகாவுடன் இணைந்து ரொமான்ஸ் காட்சிகளில் பின்னி பிடலெடுத்திருப்பார். கௌதம் வாசு தேவ் மேனன் இந்தப் படத்தில் சூர்யாவை மிகவும் அழகாக காட்டியிருப்பார். காக்க காக்க படத்திற்கு பிறகு ‘சிங்கம்’ படத்தில் ஒரு பக்கா ஆக்ஷன் ஹீரோவாக அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார்.
இதையும் படிங்க : நடிச்சதுக்கு சம்பளம் கேட்டேன்!.. தப்பா?.. சந்தானம் படத்தில் பிரபல நடிகர் அனுபவித்த வேதனை!..
அந்தப் படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையையே புரட்டி போட்டது. அதனை தொடர்ந்து நடித்த படங்கள் எல்லாமே அவரின் நடிப்பை வெளிப்படுத்தும் படங்களாகவே அமைந்தது. அதன் பின் ‘சூரறை போற்று’ திரைப்படம் அனைவரையும் பிரமிக்க வைத்த திரைப்படமாக அமைந்தது. மேலும் சூர்யாவிற்கு தேசிய விருதை பெற்றுத் தந்த திரைப்படமாகவும் அமைந்தது.

அடுத்ததாக ஒரு தரமான நடிகர் என்பதை ‘ஜெய்பீம்’ திரைப்படம் நிரூபித்தது. சூர்யாவை முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் காட்டிய திரைப்படமாக இந்தப் படம் அமைந்தது. எப்படியோ ஆரம்பித்த தன் சினிமா பயணத்தை ஒரு லட்சியமாக்கி காட்டியவர் தான் சூர்யா.