’வாடிவாசல்’ இப்போதைக்கு திறக்காதாம்...! சூர்யாவின் அதிரடி முடிவால் சிக்கலில் இருக்கும் வெற்றிமாறன்...
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரின் அபாரான நடிப்பால் தமிழ் சினிமாவையே ஆச்சரியப்படுத்தி வருகிறார். சமீபத்தில் கூட விக்ரம் படத்தில் ரோலக்ஸாக வந்து பட்டையை கிளப்பி விட்டார்.
அந்த ஒரு கதாபாத்திரத்தால் ஒட்டுமொத்த இணையத்தையும் தன் பக்கம் ஈர்த்தவர் நடிகர் சூர்யா. இவரின் தொடர்ச்சியான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக ஜெய்பீம் படத்தில் நடித்ததன் மூலம் இவரின் மேல் ஒரு நல்ல பார்வை சமூகத்தில் தோன்றியுள்ளது.
மேலும் இன்று கூட ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினராக தென்னிந்திய நடிகர்களில் தேர்ந்தெடுக்கும் முதல் நடிகர் என்ற பெருமையை கூட பெற்றிருக்கிறார். இந்த நிலையில் கையில் ஏகப்பட்ட படங்களை வைத்திருக்கும் சூர்யா ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடிக்க இருந்தது. ஆனால் விடுதலை படத்தையே இன்னும் முடிக்காத வெற்றிமாறனின் வேகத்தை பார்த்து சூர்யா ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
வெற்றிமாறனிடன் இன்னும் இரண்டு வருடங்களுக்கு வாடிவாசலை நினைத்து என்னிடம் வந்து விடாதீர்கள். இரண்டு வருடங்களுக்கு அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளாராம் சூர்யா. இதனிடையில் சூர்யா பாலா இயக்கத்தில் ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோக இன்னும் சில படங்கள் கைவசம் வைத்திருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.