வதந்திகளுக்கு தரமான பதிலடி...! போஸ்டரை போட்டு முற்றுப் புள்ளி வைத்த சூர்யா...
சூர்யா- பாலா கூட்டணி கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மீண்டும் இணைவது அனைவரின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் ஒரு தரமான சம்பவம் பாலா செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பில் இருந்தவர்களுக்கு படப்பிடிப்பை பற்றி வந்த அடுத்த அடுத்த செய்திகள் சூர்யாவின் ரசிகர்களை பெரும் கவலையில் ஆழ்த்தியது.
கன்னியாகுமரியில் பூஜை போட்டு ஆரம்பித்த படப்பிடிப்பு திடீரென கொஞ்ச நாளிலயே நின்று போனது. விசாரித்ததில் சூர்யாவிற்கும் பாலாவிற்கும் காரசாரமான விவாதம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. பின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்றது.
அங்கேயும் வேறு ஒரு பிரச்சினை கிளம்ப படக்குழு குழப்பத்தில் இருந்தனர். ரசிகர்களும் உண்மையிலயே சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இடையே தான் பிரச்சினை வலுப்பெற்றதோ படம் அப்படியே டிராப் ஆயிடமோ என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் பாலா எடுத்த ஷார்ட்டையே திரும்பி திரும்பி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆகையால் ஸ்கிரிப்டை நன்றாக செதுக்கி அதன் பின் படப்பிடிப்பை ஆரம்பிக்கலாம் என்று முடிவு செய்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் இன்று திடீரென சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதை பார்த்ததுமே ரசிகர்களுக்கு தெரிந்து விடும் பிரச்சினை சூர்யாவிற்கும் பாலாவிற்கும் இல்லை என்று. ஏனெனில் போஸ்டரில் இப்போது நடிக்கும் படத்தின் புகைப்படத்தை வெளியிட்ட ”நான் படப்பிடிப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் “ என்று ட்விர் செய்துள்ளார்.