சூர்யாவின் கன்னத்தில் அறைந்த அந்த பிரபலம்!..இப்படியெல்லாம் பண்ணா யாருக்கு தான் கடுப்பாகாது?..

by Rohini |   ( Updated:2022-10-15 19:35:55  )
surya_main_cine
X

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் சமீபத்தில் ‘சூரரைப்போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றவர். அதற்கு முன் இவரின் நடிப்பில் வெளிவந்த ஜெய்பீம், விக்ரம் படத்திற்கான ரோலக்ஸ் போன்ற கதாபாத்திரங்களால் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டும் படியாக அமைந்தது.

surya1_cine

ஆரம்பக்காலங்களில் கிடைத்த கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த சூர்யா தற்போது அவர் கதையை தேர்ந்தெடுப்பதில் ரொம்பவும் மெனக்கிடுகிறார். இதனால் ஒரு மாபெரும் கலைஞனாக மக்கள் முன் அறியப்படுகிறார். இந்த நிலையில் இவர் நடித்த முதல் படமான நேருக்கு நேர் திரைப்படத்தில் இவருக்கு ஏற்பட்ட அவமானம் குறித்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

surya2_cine

நடிக்க வரும் புதிதில் நடிக்கவும் தெரியாது, நடனம் ஆடவும் தெரியாது சூர்யாவுக்கு. அந்த படத்தில் ‘அவள் வருவாளா’ பாடலுக்கு நடனமே இருக்காது. ஆனால் அதை கூட ஆடத்தெரியாமல் நடன இயக்குனரை கடுப்பேற்றியிருக்கிறார் சூர்யா. அந்த பாடல் இரவு 12 மணி நேரம் வரை நடத்தப்படுவதாக முடிவு எடுத்திருக்கிறார்கள் படக்குழு.

surya3_cine

ஆனால் நம்ம நாயகன் 1, 2, 2.30 மணி நேரம் வரை பாடாய் படுத்தியிருக்கிறார். நிறைய டேக்குகளை வாங்கிக் கொண்டே இருந்தாராம் சூர்யா. ஒரு சமயத்தில் காண்டாகி போன அந்த நடன இயக்குனர் சூர்யாவின் கன்னத்தில் அறைந்தாராம். இதனால் மனமுடைந்த சூர்யா கதறி அழுக மிகவும் சிரமப்பட்டு மறுபடியும் 4, 5 டேக்குகள் வாங்கி தான் அந்த பாடலை ஆடி முடித்திருக்கிறார்.

Next Story