அகரம் பவுண்டேஷனுக்கு காசு கொடுக்க வேண்டாம்... ஷாக் தகவல்

by Akhilan |
அகரம்
X

சூர்யாவின் கல்வி அறக்கட்டளைக்கு எதுவும் நிதியுதவி கொடுக்க வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. ஒரு புறம் நடிகராக இருந்தாலும், மறு புறம் பல ஏழை குழந்தைகளுக்கு படிப்புதவி செய்து வருகிறார். அதனை அகரம் என்ற அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார். செப்டம்பர் 2006ம் ஆண்டு இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டது.

அகரம்

1979ம் ஆண்டு முதல் நடிகர் சூர்யாவின் தந்தை நடிகர் சிவகுமார் தனது அறக்கட்டளை மூலம் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவிகளை செய்து வருகிறார். இதற்கு பின்னரே,இது அகரம் அறக்கட்டளையானது. சூர்யா மட்டுமல்லாமல் பல பதவியில் இருக்கும் பலரும் இதற்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள். இதன் உதவி மூலம் படித்த பல மாணவர்கள் தற்போது பெரிய பதவியில் இருந்து வருகிறார்கள்.

இதையும் படிங்க: சூர்யாவுக்கு சினிமா ஒன்னும் தராது…! அவனுக்கு அடையாளமே இது தான்…சிவக்குமாரின் ஆக்ரோஷமான பேச்சு…

அகரம்

சமீபகாலமாக பலரின் பெயரில் போலி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளது. அதிலிருந்து காசு கொடுக்க வேண்டும் என மெசேஜ்களும் வந்தவண்ணம் இருக்கின்றன. இது புகழ்பெற்ற அறக்கட்டளைக்கு நடந்தது. பெரும் அதிர்ச்சியாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Next Story