விஜயின் மார்கெட்டை நெருங்கிய சூர்யா! ‘கங்குவா’ திரைப்படத்தால் வந்த வாழ்வுதான்.. இன்னும் பிடிக்கமுடியாது
தமிழ் சினிமாவில் அஜித் விஜய் என இரு பெரும் நடிகர்கள் தனக்கான இடத்தை இதுவரைக்கும் யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து தங்கள் இலக்கை நோக்கி பயணம் செய்து கொண்டே வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலங்களில் இருந்து சமமான வெற்றி தோல்விகளை பார்த்தவர்கள். இருவருக்குமே லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கின்றனர்.
இவர்களுக்கு இணையான அந்தஸ்தை பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவருக்கும் இண்டஸ்ட்ரியில் ஒரு தனி மரியாதையே இருந்து வருகிறது. நேருக்கு நேர் படத்தில் முதன் முதலில் அறிமுகமான சூர்யா அதில் விஜயுடன் சேர்ந்து நடித்தார். அதன் பிறகு நீண்ட வருடங்கள் கழித்து மீண்டும் பிரண்ட்ஸ் என்ற திரைப்படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தார்.
அதுவரை நடிப்பில் மட்டுமே ஆர்வம் காட்டிய சூர்யா அதனை தொடர்ந்து ஆக்ஷன், டான்ஸ் என மற்றவற்றிலும் கவனம் செலுத்தி இன்று ஒரு மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் ஒரு படத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கின்றது.
ஹீரோ என்பதையும் தாண்டி ஒரு தயாரிப்பாளராகவும் பல படங்களை இவரது நிறுவனம் சார்பாக சூர்யா தயாரித்து வருகிறார். இந்த நிலையில் சூர்யா இப்போது கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். கங்குவா திரைப்படத்தை பொறுத்தவரைக்கும் 10 மொழிகளுக்கு மேல் தயாராகி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
கங்குவா படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸ் என சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கங்குவா படத்தின் தமிழ் நாடு தியேட்டரிக்கல் உரிமை குறித்து ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. கங்குவா படத்தின் தமிழ் நாடு தியேட்டரிக்கல் உரிமையை 75 கோடி கொடுத்து வாங்கியதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இது கோலிவுட்டில் விஜய் படத்திற்கு மட்டும்தான் இந்தளவு வியாபாரம் ஆகும் என்று சொல்லப்படுகிறதாம்.
விஜய் படத்திற்கு அடுத்தபடியாக சூர்யாவின் கங்குவா படம்தான் இந்தளவு விற்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தளவுக்கு கங்குவா படம் மிகப்பிரம்மாதமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.