இவர் தான் உண்மையிலேயே கொண்டாடப்பட வேண்டிய நடிகர்!.. ரசிகர்களை அழைத்து திட்டங்களை வகுத்த சூர்யா..
தமிழ் சினிமாவில் விஜய் அஜித் என கொண்டாடும் ரசிகர்கள் சூர்யாவை மறந்துவிடுகிறார்கள். சும்மா திரையில் மாஸ் காட்டுவதும் ஃபைட் பண்ணுவதும் தான் நடிகர்களுக்கு அழகு என்று நினைத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு மத்தியில் சூர்யாவின் பல நல்ல திட்டங்களை அறியாமல் இருக்கும் ரசிகர்களும் ஏராளம்.
அனைவரும் கொண்டாடப்படும் நடிகராகவே நிஜ வாழ்க்கையில் சத்தமில்லாமல் தன் வேலையை செய்து கொண்டிருக்கிறார். அவரின் அகரம் அறக்கட்டளை மூலம் மாணவர்களுக்கு கல்வியை கொடுப்பது என அனைவரும் அறிந்த விஷயம் என்றாலும் சமீபத்தில் மாவட்ட வாரியாக தன் ரசிகர்களை அழைத்து பல திட்டங்களை வகுத்துள்ளார்.
இதையும் படிங்க : அப்பா – மகன் உறவை இப்படியா காட்டுறது?.. சொசைட்டியை நாசம் பண்ணிய செல்வராகவன் குடும்பம்…
தன்னுடைய ரசிகர்கள் வீட்டில் படித்தவர்கள் இருந்தால் அவர்களுக்கும் இன்னும் மேற்படிப்பு வழங்க உதவி செய்யப்படும் என்றும் ரசிகர்களில் வீட்டில் ஏதாவது துக்க கரமான செயல் நடந்தால் அதற்கு இழப்பீடு பணம் வழங்கப்படும் என்றும் உறுதியளித்திருக்கிறார். மேலும் ரசிகர்களுக்கு மருத்துவ பாலிசி எடுத்துத்தரப்படும் என்றும் கூறியிருக்கிறாராம்.
மேலும் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலைக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் அதாவது போட்டித்தேர்வுகள், வங்கி தேர்வுகள் என அரசு வேலைக்கு தயாராகும் அனைத்து தேர்வுகளுக்கும் தேவையான வசதிகளை தானே பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்திருக்கிறாராம் சூர்யா.
ரசிகர்கள் வெறும் விசில் அடிக்கவும் கைதட்டவும் மட்டும் பயன்படுத்தாமல் அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்யத்தயாராகும் சூர்யாவை அனைத்து ரசிகர்களும் கொண்டாடவேண்டும் என செய்திகள் வைரலாகி வருகின்றது.