ஃபிளாப் கொடுத்தும் குறையலயே!.. சூர்யாவுக்கு சம்பளம் இவ்வளவு கோடியா?!…

by சிவா |   ( Updated:2025-05-06 01:09:00  )
retro surya 2025
X

retro surya 2025

நடிகர் சூர்யாவுக்கு கடந்த 10 வருடங்கள் சரியாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும். சிங்கம் சிங்கம் 2 படங்களுக்கு பின் அவரின் நடிப்பில் தியேட்டரில் வெளியான எந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை. சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய படங்கள் ஓடிடியில் ரிலீஸானதால் இந்த லிஸ்ட்டில் வரவில்லை.

சூர்யா மீது ஒரு விமர்சனம் இருக்கிறது. கதாபாத்திரமாக மாறாமல் எல்லா படத்திலும் அவர் சூர்யாவாகவே வருகிறார் என விமர்சகர்கள் சொல்கிறர்கள். நந்தா, பிதாமகன், காக்க காக்க உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே அவர் நன்றாக நடித்தார் என சொல்பவர்களும் உண்டு.

சூர்யாவை ஒரு பக்கா மாஸ் கமர்சியல் ஹீரோவாக மாற்றியது இயக்குனர் ஹரிதான். அவரின் இயக்கத்தில் சூர்யா நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றது. ஆனால், ஒரு கட்டத்தில் தன்னை ஏற்றிவிட்ட கவுதம் மேனன், பாலா, ஹரி போன்ற இயக்குனர்களையே கழட்டியும் விட்டார்.

retro surya movie
retro surya movie

சிறுத்தை சிவாவை நம்பி கங்குவா படத்தில் கடுமையான உழைப்பையும் போட்டார். ஆனால், படம் தேறவில்லை. படத்தின் திரைக்கதை சூர்யா ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இதுதான் நேரம் என சூர்யாவை பிடிக்காதவர்கள் இந்த படத்தின் மீது வன்மத்தை கக்க படமோ தோல்வி அடைந்துவிட்டது.

அதன்பின் கார்த்திக் சுப்பாராஜின் இயக்கத்தில் சூர்யா நடித்த ரெட்ரோ படம் கடந்த 1ம் தேதி வெளியானது. இந்த படம் வெற்றியா தோல்வியா என்பது யாருக்கும் தெரியவில்லை. புளூசட்ட மாறன் போன்றவர்கள் இந்த படம் பிளாப் என சொல்லி வருகிறார்கள். இந்நிலையில்தான் அடுத்து லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார்.

இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் துவங்குவதற்கு முன்பே இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 85 கோடி கொடுத்து வாங்கிவிட்டதாம். அதேபோல், சூர்யாவுக்கு 65 கோடி வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Next Story