“இன்னும் கொஞ்ச நாள்ல லவ் டூடே படத்தை மறந்திடுவாங்க..” என்ன சார் சொல்றீங்க?? சுசீந்திரன் ஓபன் டாக்…

by Arun Prasad |
Love Today
X

Love Today

கடந்த ஆண்டு வெளியான “விக்ரம்”, “பொன்னியின் செல்வன்” போன்ற திரைப்படங்களை தொடர்ந்து அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்பெற்ற படைப்பாக அமைந்த திரைப்படம் “லவ் டூடே”.

தற்கால இளைஞர்களை கவரும் வகையில் அமைந்த கதையும், ,மிகவும் சுவாரஸ்யமாக எழுதப்பட்ட திரைக்கதையும் இத்திரைப்படத்தை கடந்த வருடத்தின் முக்கிய வெற்றித் திரைப்படமாக ஆக்கியது.

Love Today

Love Today

வெறும் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கிட்டத்தட்ட 70 கோடிகளுக்கும் மேல் வசூல் ஆனது. இத்திரைப்படத்திற்கு தமிழ்நாட்டில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தெலுங்கிலும் இத்திரைப்படம் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் சுசீந்திரன், சமீபத்திய பேட்டி ஒன்றில் “லவ் டூடே” திரைப்படம் குறித்து ஒரு ஷாக் ஆன கருத்தை பகிர்ந்துள்ளார்.

“லவ் டூடே திரைப்படம் காலத்துக்கும் பேசப்படும் திரைப்படம் கிடையாது. இந்த தலைமுறைக்கு மிகவும் ஈர்ப்பான திரைப்படமாக இருக்கும். காதல் திரைப்படம் போலவோ, 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் போலவோ காலத்துக்கும் லவ் டூடே பேசப்படாது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த்தின் முதல் நாள் ஷூட்டிங் எப்படி இருந்தது தெரியுமா?? நினைச்சிப் பார்க்கவே ஆச்சரியமா இருக்கு…

Suseenthiran

Suseenthiran

இந்த தலைமுறைக்கேற்ற ஒரு ஜாலியான திரைப்படம் என்பதால் லவ் டூடே மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒரு 5 வருடங்களுக்குப் பிறகு பார்த்தால் லவ் டூடே திரைப்படத்தை நம்மால் கனெக்ட் செய்துகொள்ள முடியாது.

ஆனால் அதை மீறி ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் ஜெயித்துக் காட்டிய பிரதீப் ரங்கநாதனை நினைக்க எனக்கு பெருமையாக இருக்கிறது. லவ் டூடே படத்தோடு ஒப்பிடும்போது பிரதீப் ரங்கநாதனின் கோமாளி திரைப்படம்தான் சிறந்த திரைப்படம்” என சுசீந்திரன் அப்பேட்டியில் கூறியுள்ளார்.

Next Story