நவரச நாயகனின் மோக வலையில் சிக்காத ஒரே நடிகை இவங்கதானாம்!!... ஓப்பனாக போட்டுடைத்த சினிமா விமர்சகர்…

Karthik
தமிழ் சினிமாவின் முதல் கவர்ச்சி நடிகையாக திகழ்ந்தவர், டி.ஆர்.ராஜகுமாரி. அவரை தொடர்ந்து சில்க் ஸ்மிதா, ஷகீலா என அந்த லிஸ்ட்டில் பல பேர் உண்டு. எனினும் ஒரு கட்டத்தில் கதாநாயகிகளே கவர்ச்சியில் இறங்கத் தொடங்கினார்கள். அவ்வாறு நடித்தால்தான் சினிமாவில் மார்க்கெட்டை பிடிக்க முடியும் என்ற நிலையும் இருந்தது.
சுவலட்சுமி
1990களில் தமிழின் முன்னணி நடிகையாகவும் இளைஞர்களின் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர் சுவலட்சுமி. கல்கத்தாவைச் சேர்ந்த சுவலட்சுமி, 1994 ஆம் ஆண்டு “உத்தோரன்” என்ற பெங்காலி படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து தமிழில் “ஆசை”, “லவ் டூடே”, “நிலாவே வா” போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழின் முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். இந்த நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார்.

Suvalakshmi
கவர்ச்சியில் இறங்காத சுவலட்சுமி
பிரபல சினிமா விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், சுவலட்சுமி குறித்த பல சுவாரஸ்ய தகவல்களை தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Bayilvan Ranganathan
“தமிழ் நடிகைகள் சினிமாக்களில் கவர்ச்சியாக நடிக்க மறுத்தனர். ஆதலால்தான் பம்பாயில் இருந்து தமிழுக்கு பல கவர்ச்சி நடிகைகளை இறக்கினார்கள் இயக்குனர்கள்.
இதையும் படிங்க: 24 மணி நேரம் ஆனாலும் விஜயகாந்த் இதை விடமாட்டார்… பிரபல தயாரிப்பாளர் ஓப்பன் டாக்…

Suvalakshmi
நடிகை நதியாவுக்குப் பிறகு கவர்ச்சியாக நடிக்க மறுத்தவர் சுவலட்சுமி. தமிழில் அவர் மொத்தம் 13 திரைப்படங்களில்தான் நடித்தார். அதில் 7 படங்கள் வெள்ளி விழா பார்த்தன” என பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.
போர்த்திக்கொண்டு நடிப்பார்
மேலும் பேசிய பயில்வான் ரங்கநாதன் “சுவலட்சுமி படப்பிடிப்புத் தளத்தில் அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்றுதான் இருப்பார். போர்த்திக்கொண்டுதான் நடிப்பார். பெரும்பாலும் சேலை கட்டித்தான் நடிப்பார் சுவலட்சுமி” என அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.
கமலுடன் நடிக்க மறுத்தார்

Kamal and Suvalakshmi
“தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்ற ஒன்றிரண்டு நடிகைகளில் முக்கியமானவர் சுவலட்சுமி. எத்தனையோ நடிகர்கள் வற்புறுத்தியும் அவர் கவர்ச்சியாக நடிக்கவில்லை. இதன் காரணமாகத்தான் கமல்ஹாசனுடன் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அவர் மறுத்துவிட்டார்” என பயில்வான் ரங்கநாதன் அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.
கார்த்திக் வீசிய வலை

Karthik and Suvalakshmi
மேலும் அதில் பேசிய பயில்வான் ரங்கநாதன் “எத்தனையோ நடிகர்கள் சுவலட்சுமிக்கு காதல் வலை வீசியிருக்கிறார்கள். நடிகர் கார்த்திக் தன்னுடன் நடித்த நடிகைகள் அத்தனை பேரையும் தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்துவிடுவார். கார்த்திக்கின் காதல் வலையில் சிக்காத ஒரே நடிகை சுவலட்சுமிதான்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.