சாபமெல்லாம் விட்டீங்களே.. அட்வான்ஸை திருப்பி கொடுத்தீங்களா?!.. எஸ்.வி.சேகரை பொளக்கும் ரசிகர்கள்!..

by சிவா |   ( Updated:2025-04-09 07:18:35  )
test
X

நாடக நடிகராக அறிமுகமானவர்தான் வி.சேகர். வறுமையின் நிறம் சிகப்பு படம் மூலம் இவரை பாலச்சந்தர் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார். அதன்பின் மணல் கயிறு உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். காமெடி நடிகர் என்பதால் சீரியஸான கதாபாத்திரங்களில் நடிக்கமாட்டார். அதோடு, சினிமாவில் நடித்தாலும் ஒருபக்கம் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வருகிறார்.

இன்னமும் எஸ்.வி.சேகரின் நாடகம் சென்னையில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. சினிமாவில் காமெடியன் என்றாலும் நாடகத்தில் எஸ்.வி.சேகர் ஹீரோதான். பல வருடங்களாக அரசியலிலும் இருக்கிறார். எல்லா கட்சி தலைவர்களுடன் இணக்கமாக இருப்பார். 2006ம் வருடம் மயிலாப்பூரில் அதிமுக சார்பில் நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதன்பின் பாஜக கட்சிக்கு சென்றார். ஆனால், அங்கு அவருக்கு சரியான அங்கிகாரம் கிடைக்கவில்லை. பாஜக தலைவர் பதவி தனக்கு கிடைக்காத கோபத்தில் அண்ணாமலையை திட்ட துவங்கினார். அண்ணாமலை இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது என தொடர்ந்து சொல்லி வந்தார். அவ்வப்போது வாய் துடுக்காக எதையாவது பேசி சர்ச்சையிலும் சிக்குவார்.

பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி ஒரு பதிவை முகநூலில் பகிர்ந்ததற்காக இவர் மீது நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.அதில், எஸ்.வி சேகரை கைது செய்யுங்கள் என நீதிமன்றம் சொல்லியும் எடப்பாடி பழனிச்சாமி அரசு இவரை கைது செய்யவில்லை. மாறாக போலீசார் பாதுகாப்போடு இவரை அழைத்து சென்று வந்தனர். இதற்கு பின்னணியில் பாஜக இருந்ததாக சொல்லப்பட்டது.

சமீபத்தில் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் ஆகியோர் நடித்து டெஸ்ட் என்கிற படம் ஓடிடியில் வெளியானது. இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அப்போது ‘என்னை ஒரு படத்திலிருந்து தூக்கினால் அந்த படம் ரிலீஸ் ஆகாது. அப்படியே வெளியானாலும் படம் ஓடாது’ என பதிவிட்டிருந்தார். இந்த படத்தில் சித்தார்த்தின் அப்பாவாக நடிக்க முதலில் எஸ்.வி.சேகரை கேட்டிருக்கிறார்கள். அதன்பின் வேறு நடிகரை நடிக்க வைத்துவிட்டனர். இந்த கோபத்தில் அப்படி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த படத்திற்காக வாங்கிய அட்வான்ஸை எஸ்.வி.சேகர் இதுவரை திருப்பி கொடுக்கவில்லை என சொல்லப்படுகிறது. தயாரிப்பு நிறுவனமும் கேட்டு கேட்டு பார்த்து எஸ்.வி.சேகர் இழுத்தடிக்க ‘பணமே வேண்டாம்’ என விட்டுவிட்டார்களாம்.இதைத்தொடர்ந்து ‘சாபமெல்லாம் விட்டீங்களே.. படத்திலயே நடிக்காத நீங்க அட்வான்ஸை திருப்பி கொடுக்க வேண்டியதுதான’ என ரசிகர்கள் காலாய்த்து வருகிறார்கள்.

Next Story