More
Categories: Cinema News latest news

Vijay: விஜய் எல்லாரையும் கேரவனுக்குள்ள விடுவாரா?!… இன்னும் 500 நாள் இருக்கு… பிரபல நடிகர் தடாலடி!…

நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து பிரபல நடிகரும், முன்னாள் அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் பேசியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகராக ஒரு திரைப்படத்திற்கு 250 கோடி வரை சம்பளம் வாங்கக்கூடிய நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது வரை லைம் லைட்டில் இருந்து வரும் நடிகர் விஜய் சினிமாவை ஒதுக்கி வைத்துவிட்டு அரசியலில் குதித்து இருக்கின்றார். தமிழக வெற்றி கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் கட்சி தொடர்பான அறிவிப்பை இந்த வருடம் பிப்ரவரி மாதம் அறிவித்தார்.

Advertising
Advertising

அதன் பிறகு தேர்தல் ஆணையத்தில் கட்சியை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்து கட்சியின் கொடி, பாடல், கொள்கை, மாநாடு என அனைத்தையும் நடத்தி முடித்து விட்டார். நடிகர் விஜய் கட்சி தொடங்கிய போது பலருடைய ஆதரவு இருந்தது. ஆனால் அதெல்லாம் நடிகர் விஜய் நடத்திய முதல் மாநாடு வரையில்தான்.

இதையும் படிங்க: Amaran: ‘கங்குவா’ வந்தாலும் அமரன் படத்த தூக்க கூடாது.. தியேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் ரெட் ஜெயண்ட்

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி நடிகர் விஜய் நடத்திய முதல் மாநாட்டில் பல அரசியல் கட்சிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் தாக்கி பேசி இருந்தார். அதிலும் தற்போது ஆளும் கட்சியான திமுக கட்சியை நேரடியாக விமர்சனம் செய்திருந்தது. இது திமுக தொண்டர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் நடிகர் விஜயின் பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்கள்.

மேலும் நடிகர் விஜயின் கட்சி கொள்கை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டபடி திட்டி பேசியிருந்தார். நடிகர் விஜயை லாரி அடித்து செத்துப்போவாய், கூமுட்டை என்றெல்லாம் பேசியிருந்தது. நடிகர் விஜயின் ரசிகர்களையும் தமிழக வெற்றிக்கழக கட்சியின் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இருப்பினும் நடிகர் விஜய் சீமான் உள்ளிட்ட எந்த தலைவர்களையும் காயப்படுத்தும் விதமாக பேசக்கூடாது கண்ணியம் குறைவாக நடந்து கொள்ளக் கூடாது என்று தன்னுடைய தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

sekar

அது மட்டும் இல்லாமல் இன்று தன்னை தரக்குறைவாக பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பிரபல நடிகரும், முன்னாள் அரசியல்வாதியுமான எஸ்வி சேகர் இந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் நடிகர் விஜய் குறித்து கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு பதில் அளித்த அவர் தெரிவித்திருந்ததாவது: ‘எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்கின்ற விஜய் கேரவன் உள்ளே எல்லாரையும் விடுவாரா? இதெல்லாம் நடக்கிற கதையா? நடிகர் விஜய் இன்றைக்கு அரசியலுக்கு வந்திருக்கின்றார். வந்த உடனே அவரை விமர்சிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவரும் 50 வயசில் தான் கட்சி தொடங்கி இருக்கின்றார். அவர் ஒரு படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகின்றார்.

இதையும் படிங்க: Gossip: கட்சி நடிகருக்கு ‘நோ’ சொல்லிட்டு… கடைசில இப்படி பண்ணிட்டாரே!

அதை விட்டுவிட்டு வந்திருக்கிறார். ஆனால் அவர் என்ன நல்லது செய்கின்றார் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த இன்னும் 500 நாட்கள் இருக்கின்றது. 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல்தான் அதை முடிவு செய்யும். எம்ஜிஆர் ஒன்றும் கோடம்பாக்கத்தில் இருந்து நேராக முதல்வராகிவிடவில்லை.

படிப்படியாக முன்னேறி முதல்வர் ஆனார். நடிகர் விஜயின் கட்சியை மைனஸ் ஆகவும் சொல்லமாட்டேன் பிளஸ் ஆகவும் சொல்ல மாட்டேன். கூட்டம் வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறுமா என்பது கேள்விக்குறி. அதை ஓட்டாக மாற்ற வேண்டிய அவசியமும் சூழ்நிலையும் அந்த திறமையும் விஜய்க்கு இருக்க வேண்டும். அது இருந்தால் நல்லது’ என்று விஜயின் அரசியல் வருகை குறித்து பேசி இருக்கின்றார்.

Published by
ramya suresh

Recent Posts