தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளியும் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தமிழகத்தில் நடைபெறும் பாலியல் குற்றங்கள் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக் கூறுவதை ஏற்க முடியாது எனத் தெரிவித்தார். மேலும்
என் வீட்டு பீரோவைப் பூட்டாமல் விட்டுவிட்டு, திருடன் திருடிவிட்டான் என்றால் அதற்குச் சட்டம் ஒழுங்கு எப்படிப் பொறுப்பாகும்? என்று பொறுப்பற்ற முறையில் கேள்வி எழுப்பினார். பெண் குழந்தைகளைப் பெற்றோர்கள் தான் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், கழிவறைக்குச் சென்றால் கூடத் துணைக்கு ஆள் செல்ல வேண்டும் என்றும் கூறினார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண் ஏன் புதருக்குள் போனார்? புதருக்குள் போலீஸ் விளக்கு போட முடியுமா? என கூறினார்.
இதையும் படிங்க: விஜயகாந்த் சாவுக்கு போயிருந்தா நான் செத்திருப்பேன்!… பொன்னம்பலம் ஃபீலிங்…
எஸ்.வி.சேகரின் இந்தப் பேச்சுக்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, பாடகி சின்மயி தனது எக்ஸ் தளத்தில் எஸ்.வி.சேகர் பேசிய வீடியோவைப் பகிர்ந்து அவருக்கான பதிலடி கொடுத்துள்ளார்.
விளாத்திகுளத்தில் நடந்த கொடூரத்தைச் சுட்டிக்காட்டிய சின்மயி, அந்தப் பெண் புதருக்குப் பின்னால் செல்லக் காரணம், அந்த ஊரில் கழிவறைகள் மற்றும் குளியலறைகள் இல்லாததே. இயற்கை உபாதையைக் கழிக்கவே அவர் அங்கு சென்றார். இந்தியாவில் கழிவறை வசதியின்றித் திறந்தவெளியைப் பயன்படுத்தும் இளம் பெண்களும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது சர்வ சாதாரணமாக நடக்கும் அவலம்.
உடல் காயம் ஏற்படும் என்ற அச்சமின்றி, தாங்கள் விரும்பும் இடத்தில், விரும்பும் போதெல்லாம் பாதுகாப்பாக ஆடையின் ஜிப்பைக் கழற்றிச் சிறுநீர் கழிக்கக்கூடிய ஆண்களால், கழிவறை வசதியின்றிப் பெண்கள் எதிர்கொள்ளும் இந்த அன்றாடப் போராட்டத்தையும் ஆபத்தையும் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது எனச் சின்மயி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.





