சான்ஸ் கொடுக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாரு ரஜினிகாந்த்!.. சோகத்தில் புலம்பிய எஸ்.வி. சேகர்!..

Published on: November 15, 2023
---Advertisement---

நகைச்சுவை படங்களிலும் எண்ணற்ற நாடகங்கள் மூலமாகவும் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த எஸ்.வி. சேகர் 73 வயதிலும் டீட்டோட்டலராகவே உள்ளதாகவும் அவரது மகன் அஸ்வின் சேகரும் இதுவரை எந்தவொரு கெட்டப் பழக்கமும் இன்றி டீட்டோட்லராக உள்ளார் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த நினைத்தாலே இனிக்கும் படத்தில் ரேடியோ ஆப்பரேட்டராக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் எஸ்.வி. சேகர். அடுத்து வறுமையின் நிறம் சிவப்பு, குடும்பம் ஒரு கதம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்த எஸ்.வி. சேகர், விசு இயக்கத்தில் வெளியான மணல் கயிறு படத்தின் மூலம் பிரபலமானார்.

இதையும் படிங்க: ஷாருக்கானுக்கே விபூதி அடித்த விஜய்!.. குறுக்கே வந்த கெளசிக் கமல்ஹாசன்!.. என்ன ஆகப் போகுதோ?..

தொடர்ந்து பல விசு படங்களில் நடித்த எஸ்.வி. சேகர் ஏகப்பட்ட மேடை நாடகங்களையும் போட்டு சாதனை படைத்துள்ளார். ஆனால், அவர் அளவுக்கு அவரது மகன் அஸ்வின் சேகர் சினிமாவில் சாதிக்கவில்லை.

வேகம்  படத்தின் மூலம் அஸ்வின் சேகரை எஸ்.வி. சேகர் அறிமுகப்படுத்திய நிலையில், நினைவில் நின்றவள், மணல் கயிறு 2 உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், ஒரு படமும் ஓடாத நிலையில், சினிமாவில் இருந்து காணாமல் போய் விட்டார்.

இதையும் படிங்க: ஏழு வருடங்கள் நடிக்காமல் இருந்த கமல்!.. உலக நாயகனுக்கு இப்படி ஒரு சோதனையா?…

இந்நிலையில், அப்பாவும் மகனும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நடிகர் ரஜினிகாந்திடம் என் மகனை அழைத்துச் சென்றேன். அவரும் பார்த்து விட்டு தனது படத்தில் வாய்ப்பு கொடுக்கிறேன் என்றார். ஆனால், அவ்வளவு தான் அதன் பிறகு அவர் அதனை மறந்து விட்டார். அதற்காக அவரிடம் சென்று மீண்டும் கேட்க முடியுமா? என தனது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.