ஷூட்டிங் வராமல் சொதப்பிய சரோஜா தேவி!.. நெருப்பில் சிக்கவைத்து வேடிக்கை பார்த்த இயக்குனர்!..

Published on: April 18, 2023
saroja devi
---Advertisement---

சில இயக்குனர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. கதாநாயகன் அல்லது கதாநாயகி மீதோ கோபம் இருந்தால் படப்பிடிப்பில் சில காட்சிகளை எடுக்கும்போது அதில் காட்டி விடுவார்கள். உலகின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவரும், ஹாலிவுட்டில் பல க்ரைம் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படங்களை இயக்கியவருமான ஆல்பர்ட் ஹிட்ச்காக் கூட The Birds படத்தை எடுக்கும் போது அப்படத்தின் கதாநாயகி மீது காதல் கொண்டார்.

ஆனால், அந்த காதலை அவர் ஏற்கவில்லை. எனவே, காக்கா அவரை விரட்டி கொத்துவது போல் காட்சி எடுக்கும்போது வேண்டுமென்றே அதிக நேரம் அவரை நடிக்க வைத்து காக்காவிடம் கொத்து வாங்க வைத்தார் என ஒரு கதை உண்டு. அதேபோல், ஒரு சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்தது.

தமிழ் திரையுலகில் டி.பிரகாஷ் ராவ் என்கிற இயக்குனர் இருந்தார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களை இயக்கியுள்ளார். இவர் 1960ம் ஆண்டு ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் சரோஜாதேவி நடித்திருந்தார். சரோஜாதேவி சரியாக படப்பிடிப்புக்கு வராமல் சொதப்பி வந்துள்ளார். இந்த படத்தில் நெருப்பில் அவர் சிக்குவது போல் ஒரு காட்சியை பிரகாஷ் ராவ் எடுத்தார். அப்போது சரோஜா தேவி மீது இருந்த கோபத்தில் காட்சி முடிந்தும் சில வினாடிகள் சரோஜாதேவி நெருப்பில் விட்டுவிட்டு வேடிக்கை பார்த்துள்ளார். அவர் அலறவே படப்பிடிப்பில் இருந்தவர்கள் அவரை காப்பாற்றி வெளியே கொண்டுவந்துள்ளனர்.

அதன்பின் சில மாதங்களில் பிரகாஷ் ராவ் கையில் சிகரெட்டை பிடித்துக்கொண்ட அவரின் காரில் பெட்ரோல் இருக்கிறதா என செக் செய்துள்ளார். அப்போது நெருப்புத்துண்டு பெட்ரோல் டேங்கில் விழுந்து கார் தீப்பற்றி அவரின் கையில் பாதி அளவுக்கு நெருப்பு காயம் ஏற்பட்டது. அதன்பின் கையில் பெரிய கிளவுஸ் அணிந்துதான் அவர் படங்களை இயக்கி வந்தார்.

இந்த தகவலை கவிஞர் வாலி தான் எழுதிய ‘நினைவு நாடாக்கள்’ நூலில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு ஒருவருக்கு தீங்கு செய்தால் அது நம்மையும் தாக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.