ஆபீஸ் பாய் கேட்ட கேள்வி!.. ஆடிப்போன டி.ராஜேந்தர்... முதல் பட ரிலீஸில் வந்த பயம்..
தமிழ் சினிமாவில் ‘ஒருதலை ராகம்’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் டி.ராஜேந்தர். காதலின் வலியையும், சோகத்தையும் காட்டி ரசிகர்களையும் கலங்க வைத்தவர். கல்லூரி மாணவராக இருக்கும்போதே கதை, கவிதை, இசை, பாடல் எழுதுவது என எல்லாவற்றிலும் திறமைசாலியாக இருந்தார். அதனால்தான் இயக்குனராக வேண்டும் என முடிவெடுத்தார். முதல் படத்திலேயே கதை,திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள், இசை என எல்லாவற்றையுமே அவரே செய்தார்.
மிகவும் கஷ்டப்பட்டுதான் இப்படத்தின் வாய்ப்பை டி.ராஜேந்தர் பெற்றார். இந்த திரைப்படம் 1980ம் ஆண்டு வெளியானது. படம் வெளியாகி சில நாட்கள் தியேட்டரில் கூட்டமே இல்லை. இன்னும் இரண்டு நாட்கள் இப்படம் ஓடினாலே பெரிய விஷயம் என இப்படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களும், தியேட்டர் அதிபர்களும் கருதினார்கள். ஆனால், அடுத்த வாரத்தில் படம் பிக்கப் ஆகி மாபெரும் வெற்றி பெற்றது. அதற்கு காரணம் இப்படத்தில் இடம் பெற்ற வாசமில்லா மலரிது, கூடையில கருவாடு ஆகிய பாடல்கள்தான். அந்த பாடல்கள் மூலம்தான் இந்த படத்திற்கு ரசிகர்களும் வர துவங்கினார்கள்.
இது ஒருபுறம் எனில், இந்த படத்தை முடித்துவிட்டு தயாரிப்பாளர் உள்ளிட்ட சிலருக்கு டி.ராஜேந்தர் படத்தை போட்டு காட்டினார். அதில், டி.ராஜேந்தரின் அலுவலகத்தில் வேலை செய்த ஆபிஸ் பாயும் ஒருவன். படம் பார்த்து முடித்த பின் அந்த சிறுவன் அடித்த கமெண்ட்டுதான் டி.ராஜேந்தரை அதிர வைத்தது.
இதையும் படிங்க: ஓ மை டார்லிங்!. ஓ மை லவ்!. படப்பிடிப்பில் எம்.ஜி.ஆரை விடாமல் டார்ச்சர் செய்த பிரபலம்!..
‘ஏன் சார்.. படத்தில் வரும் கதாநாயகியின் அம்மா தன் மகளும் தன்னை போல் ஆகிவிடக்கூடாது என நினைத்து ஆண்களை நம்பக்கூடாது. யாரையும் காதலிக்க கூடாது’ என சொல்கிறார். ஹீரோ அவரின் அம்மா, அப்பாவை கூட்டி வந்து பெண் கேட்டிருக்கலாமே. அப்படி அவர் கேட்டிருந்தால் அவரின் பெண்ணை கொடுத்திருப்பார்தானே. அதைவிட்டு விட்டு எதற்கு சோகத்தில் ஹீரோ சாவது போல படத்தை முடித்திருக்கிறீர்கள்’ என கேட்டானாம்.
இதைக்கேட்டு அதிர்ந்து போன டி.ராஜேந்தர் இப்படி ஒரு லாஜிக் ஓட்டை இருக்கிறதா?.. இதே கேள்வி படம் பார்க்கும் ரசிகர்களுக்கும் வந்துவிட்டால் படம் ஓடாதே!.. என பயந்து கொண்டே படத்தை ரிலீஸ் செய்தாரம். ஆனால், படம் ரசிகர்களுக்கு பிடித்து படம் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விஜயுடன் ஷங்கர் இணைவது உண்மையா?!. இருக்கு ஆனா இல்ல!.. விஷயம் இதுதான்!..