Cinema History
ஹீரோன்னா அழகாத்தான் இருக்கணுமா?!. டிரெண்டையே மாற்றி தெறிக்கவிட்ட டி.ராஜேந்தர் – கே.பாக்கியராஜ்…
பொதுவாக சினிமா ஹீரோக்கள் என்றாலே வசீகரமான முகம் வேண்டும். ஆஜானுபாகுவான உடலமைப்பு வேண்டும். நன்றாக சண்டை போட தெரிய வேண்டும். நடனமாட தெரிய வேண்டும்.. குறிப்பாக ரசிகர்களை கவரும்படியான முகமும், ஏதோ ஒரு திறமையும் அவரிடம் இருக்க வேண்டும் என்றுதான் திரையுலகில் நினைப்பார்கள்.
1960க்கும் முன்னாடி சென்றால் ஹீரோவுக்கு சொந்தமாக பாடவும் தெரிந்திருக்க வேண்டும். அப்படித்தான் டி.ஆர்.மகாலிங்கமும், தியாகராஜ பகவாதரும் ஹீரோ ஆனார்கள். 60க்கு பின் பின்னணி பாடர்களை பாட வைத்து எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் வாயசைத்து நடித்தார்கள்.
இதையும் படிங்க: பாக்கியராஜின் ஹிட் படத்தில் நடித்து இருக்கிறாரா அவர் முதல் மனைவி… அவர் இறந்ததுக்கும் காரணம் இதுதானா?
இப்போது வரை அதுதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது சினிமாவில் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்கிற நிலை உருவாகி விட்டது. திடீர் திடீரென என புதுப்புது நடிகர்கள் வருகிறார்கள். காணாமல் போகிறார்கள். சிலர் மட்டுமே தாக்குபிடிக்கிறார்கள். ஆனால், 80,90களில் அப்படி இல்லை.
புதுமுக நடிகர்கள் அதிகம் சோபிக்காத காலம் அது. ரஜினி, கமல், பிரபு, கார்த்திக், மோகன் என அழகான அல்லது வசீகரம் கொண்ட நடிகர்கள் மட்டுமே அதிக படங்களில் நடித்துக்கொண்டிருந்தனர். அப்போதுதான் ஒருதலை ராகம் படம் மூலம் எண்ட்ரி கொடுத்தார் டி.ராஜேந்தர். அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து ஒரு வருடம் ஓடியது.
இதையும் படிங்க: குஷ்புவுக்கு கோவில் கட்டிய ரசிகர்கள்… இதுக்குப் பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா?
முகத்தில் தாடி வைத்துகொண்டு அடுக்கு மொழி வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராகவும் மாறி ரஜினிக்கே டஃப் கொடுத்தார். அழகாக இல்லை என்றாலும் வசனம் பேசும் ஸ்டைல் மற்றும் உடல்மொழியில் தனக்கென ரசிகர்களை உருவாக்கினார்.
அதேபோல் சோடா புட்டி கண்ணாடி, ஒடுக்கு விழுந்த முகம் என ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் கே.பாக்கியராஜ். தன்னுடைய கதை, திரைக்கதையால் பெண் ரசிகைகளை கவர்ந்தவர். கமல்ஹாசன் போல காதல் மன்னனைத்தான் பெண்களுக்கு பிடிக்கும் என்கிற கான்செப்ட்டை உடைத்தவர் இவர். பாக்கியராஜ் படம் என்றாலே மேட்டனி ஷோ என சொல்லப்படும் மதிய காட்சிக்கு இல்லத்தரசிகள் கூட்டம் கூட்டமாக போவார்கள்.
மொத்தத்தில் சினிமாவின் மரபு மற்றும் இலக்கணங்களை டி.ராஜேந்தரும், பாக்கியராஜும் உடைத்து துக்கி எறிந்தனர் என்பதுதான் உண்மை.
இதையும் படிங்க: இப்படி நான் பேச மாட்டேன்!. வடிவேலு நடிக்க மறுத்த சூப்பர் காமெடி!.. அப்புறம் அவர் சொல்லிதான் நடிச்சாராம்!..