ஏ.ஆர்.ரஹ்மானால் ரெக்கார்டிங்கை கேன்சல் செய்த டி.ராஜேந்தர்… என்னவா இருக்கும்?
தமிழ் சினிமாவில் பன்முக கலைஞராக திகழ்ந்து வந்தவர் டி.ராஜேந்தர். இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர், பாடகர், ஒளிப்பதிவாளர் போன்ற பல ரூபங்களில் வலம் வந்தவர் டி.ஆர். இவர் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் “ஒரு தலை ராகம்”. ஆனால் அத்திரைப்படத்தில் இவரது பெயர் இடம்பெறவில்லை.
ஆதலால் “வசந்த அழைப்புகள்” என்ற திரைப்படம் இவர் இயக்கிய முதல் திரைப்படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து “உயிருள்ளவரை உஷா”, “தங்கைக்கோர் கீதம்”, “உறவுக்காத்த கிளி” போன்ற பல ஹிட் திரைப்படங்களை இயக்கிய டி.ராஜேந்தர் தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்தார்.
டி.ராஜேந்தரின் ரைமிங்கான வசனங்கள் இப்போதும் மிகப் பிரபலமானவை. இவ்வாறு டி.ராஜேந்தர் தனது திரைபடங்களால் பல ரசிகர்களை கவர்ந்திருந்தார். இந்த நிலையில் டி.ராஜேந்தரிடம் பணியாற்றியது குறித்து டிரம்ஸ் சிவமணி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
ரெக்கார்டிங்கை கேன்சல் செய்த டி.ராஜேந்தர்
டிரம்ஸ் சிவமணி, மிக முக்கியமான டிரம்ஸ் கலைஞராக திகழ்ந்து வருபவர். எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், தேவராஜன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற டாப் இசையமைப்பாளர்களுடன் டிரம்ஸ் மணி பணியாற்றியுள்ளார். மேலும் “அரிமா நம்பி”, “கணிதன்” போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்தும் உள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மானும், டிரம்ஸ் சிவமணியும் ஒரு காலகட்டத்தில் டி.ராஜேந்தரின் இசைக்குழுவில் இசை கலைஞர்களாக பணியாற்றினார்களாம். அப்போது டி.ராஜேந்தருக்கு சிவமணி, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் வாசிக்கும் இசை மிகவும் பிடித்துப்போனதாம். இவர்கள் இருவரும் வரவில்லை என்றால் ரெக்கார்டிங்கையே கேன்சல் செய்துவிடுவாராம். அவ்வாறு இரண்டு மூன்று முறை கேன்சல் செய்தும் இருக்கிறாராம். அந்தளவுக்கு இருவரின் இசையும் டி.ராஜேந்தரை கவர்ந்திருக்கிறது.
இதையும் படிங்க: இவங்களுக்கு ஒன்னும் தெரியாது… ஹிட் பட இயக்குனரை குறை சொன்ன விஜயகாந்த்… கண்டபடி திட்டிய ராவுத்தர்…