More
Categories: Cinema History latest news

ரஜினிக்காக கதை சொன்ன டி.ஆர்…. எப்படியாப்பட்ட படம்? இப்படியா மிஸ் பண்ணுவாரு சூப்பர்ஸ்டார்?

சூப்பர்ஸ்டார் ரஜினிக்காக டி.ராஜேந்தர் இந்தப் படத்தின் கதையை சொன்னாராம். அவர் நடிக்க மறுத்ததால் தானே கதாநாயகனாக நடித்து வெளியிட்டாராம். அது என்ன படம்னு பார்ப்போமா…

கோலோச்சிய டி.ராஜேந்தர்

Advertising
Advertising

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்னு தான் அந்தக் காலத்துல படத்துக்கு கடைசியா டைரக்டர் பேரைப் போடும்போது போடுவாங்க. அந்த வகையில் ஒரு படி மேலே போய் படத்தோட தயாரிப்பாளராகவும், இசை அமைப்பாளராகவும், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பிற துறைகளிலும் கால் பதித்து சினிமாவில் கோலோச்சியவர் டி.ராஜேந்தர்.

Also read: ரஜினியின் கூலி படத்தில் இணைந்த பிகில் பட நடிகை!.. அட இவங்களா?.. வெளியான அப்டேட்!..

அதுவும் ரஜினி, கமல்னு இரு பெரும் ஜாம்பவான்கள் உச்சத்தில் இருந்தபோதே அவர்களுக்கு நிகராக படம் எடுத்து மாஸ் காட்டியவர். அந்த வகையில் இவரது படங்கள் எல்லாமே நவரசம் தான். அதனால் தானோ என்னவோ 9 எழுத்துகளில் படத்தின் பெயரை வைப்பார்.

உயிருள்ள வரை உஷா

1980ல் வெளியான இவரது ஒரு தலை ராகம் படம் தமிழ் சினிமா உலகையே புரட்டிப் போட்டது. அந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் உஷா. அவரையே காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டார் ராஜேந்தர். அவர் மீது கொண்ட காதலை வெளிப்படுத்தும் வகையில் அவர் பெயரிலேயே படத்தின் டைட்டிலை வைத்தார். 1983ல் வெளியான அந்தப் படம் தான் உயிருள்ள வரை உஷா.

வாடா என் மச்சி

படம் முழுக்க முழுக்க ஹீரோவாக நடித்து பட்டையைக் கிளப்பினார் டி.ஆர். அடுக்குமொழி வசனத்திற்கு பல ரசிகர்கள் அடிமையாகிப் போய் இருந்தனர். அந்த அளவு இவரது பேச்சாற்றல் ரசிகர்களைக் கட்டிப்போட்டது. அந்த ஸ்டைல், ‘ஏ டன்டனக்கா’ன்னு சொன்னாலே திரையரங்கமே அதிரும். அதுவுலம் ‘வாடா என் மச்சி, வாழைக்காய் பஜ்ஜி, உன் உடம்ப பிச்சி, போட்டுடுவேன் பஜ்ஜி..’ன்னு சொல்லிக்கிட்டே இவர் டான்ஸ் போட்டுக்கிட்டு சண்டை போடும் அழகை இப்போது பார்த்தாலும் நாம் இமை கொட்டாமல் பார்த்து ரசிப்போம்.

uyirullavarai usha

அந்த ஒரு ஈர்ப்பு அவரிடம் இன்று வரை உள்ளது என்றே சொல்ல வேண்டும். ஹீரோ என்;றாலே டிப் டாப்பாகவும், பார்க்க அழகாகவும் இருக்க வேண்டும் என்ற இலக்கணத்தை உடைத்தெறிந்தார். தாடியுடன் தான் படத்தில் வருவார். படத்தில் இவர் போடும் பிரம்மாண்ட செட்டுகள் எல்லாமே நம்மை ஆச்சரியப்பட வைக்கும்.

ரஜினி மறுப்பு

உயிருள்ள வரை உஷா படத்தில் ரஜினியை வைத்து எடுக்கலாம் என நினைத்தார். ஆனால் ரஜினி ஏனோ மறுத்துவிட்டார். அதனால் தனது காதலியின் நினைவாக வைத்த படத்திற்கு நாமே நடிப்போம் என்று முடிவுக்கு வந்து நடித்துள்ளார். படத்துக்கு வழக்கம்போல அனைத்து அம்சங்களும் அவர்தான். மேகம் வந்து, இந்திரலோகத்து சுந்தரி, கட் அடிப்போம் ஆகிய பாடல்கள் மாஸ் ரகங்கள்.

வைகை கரை காற்றே நில்லு

Also read: மகன் பேரை வில்லனுக்கு வைத்த விஜய்… அப்படி என்னதான் காண்டு?

படத்தில் கே.ஜே.யேசுதாஸின் காந்தக் குரலில் வைகை கரை காற்றே நில்லு என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இப்போது கேட்டாலும் நம்மை அசர வைத்து விடும். 80களில் வெளியான இது ஒரு கல்ட் கிளாசிக் காதல் படம். இப்போது படம் வெளியாகி 44 ஆண்டுகள் ஆகிறது.

Published by
sankaran v

Recent Posts