தமிழ் சினிமா ரசிகர்களின் தளபதியாக திகழ்ந்து வரும் விஜய்யின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியது அவரின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர். விஜய்யை அறிமுகப்படுத்தியது மட்டுமல்லாமல், விஜய்யின் கேரியருக்கு எப்படிப்பட்ட படங்கள் தேவை என்பதை தேர்வு செய்யும் இடத்தில் எஸ்.ஏ.சி இருந்தார்.
கிட்டத்தட்ட “துப்பாக்கி” திரைப்படம் வரைக்குமே விஜய்யின் கதை தேர்வில் எஸ்.ஏ.சியின் கைதான் ஓங்கியிருந்தது. அதன் பின் விஜய், தனக்கான கதையை தானே தேர்ந்தெடுக்கும் வழக்கத்தை வைத்துக்கொண்டார் என கூறப்படுகிறது.
ஆனால் விஜய்க்கும் எஸ்.ஏ.சிக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டதால் தற்போது இருவரும் பேசிக்கொள்வதில்லை என்று சினிமாத்துறையை சேர்ந்த பல மூத்த பத்திரிக்கையாளர்கள் கூறி வருவதுண்டு. எனினும் விஜய்யின் வளர்ச்சியில் எஸ்.ஏ.சிக்கு மிகப்பெரிய பங்குண்டு என்பது மட்டும் நிதர்சனமே.
அதே போல் இயக்குனரும் நடிகருமான டி.ராஜேந்தர், தனது மகனான சிலம்பரசனை, குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்படங்களில் அறிமுகப்படுத்தினார். அதன் பின் சிம்பு வாலிப வயதை அடைந்தவுடன் “காதல் அழிவதில்லை” திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார்.
அதன் பின் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்த சிம்பு, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார். இந்த நிலையில் பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணனிடம் ஒரு வீடியோவில்,”சிலம்பரசன் முடிவுகளில் டி.ராஜேந்தரின் இடையூறு இருப்பதாக கூறுகிறார்களே, உண்மையா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு சித்ரா லட்சுமணன் “இதில் ஒரு சதவிகிதம் கூட உண்மை இல்லை. எனக்கு தெரிந்து சிலம்பரசனின் பெரும்பாலான முடிவுகளை எடுப்பது சிலம்பரசன்தான். அதற்கு அடுத்து சிலம்பரசனின் திரை வாழ்க்கையில் முடிவுகள் எடுப்பதில் பிரதான பங்கு வகிப்பது சிலம்பரசனின் தாயாரான உஷா ராஜேந்தர்.
சிம்புவின் திரைப்படங்களை பார்த்துவிட்டு டி.ராஜேந்தர் அபிப்ராயம் சொல்வாரே தவிர, அவரது முடிவுகளில் டி ஆர் தலையிட மாட்டார்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆருக்கு அட்வான்ஸ் கொடுத்த சிவாஜி பட இயக்குனரின் கார் டிரைவர்… இதெல்லாம் படத்துல கூட நடக்க வாய்ப்பில்லை!!
Good bad…
பிரபல காமெடி…
விவாகரத்து வழக்கு…
Simran: தமிழ்…
Suriya 45:…