டைட்டிலில் பெயரும் இல்லை… சம்பளமும் இல்லை?.. டி.ராஜேந்தரின் முதல் படத்தில் நிகழ்ந்த சோகம்…

T.Rajendar
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் திகழ்ந்த டி.ராஜேந்தர் குறித்து அறியாத சினிமா ரசிகர்களே இல்லை என்று கூறலாம். தனது ரைமிங் வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த டி.ராஜேந்தர் இயக்கிய முதல் திரைப்படம் “வசந்த அழைப்புகள்”. ஆனால் அவர் இயக்கிய முதல் திரைப்படம் உண்மையில் அதுவல்ல.

T.Rajendar
1980 ஆம் ஆண்டு வெளிவந்த “ஒரு தலை ராகம்” என்ற திரைப்படம்தான் டி.ராஜேந்தர் இயக்கிய முதல் திரைப்படம். ஆனால் அத்திரைப்படத்தின் டைட்டிலில் டைரக்டர் என்பதில் அவரது பெயர் இடம்பெற்றிருக்காது. ஏன் அவரது பெயர் அதில் இடம்பெறவில்லை என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

Oru Thalai Ragam
டி.ராஜேந்தர் “ஒரு தலை ராகம்” திரைப்படத்தின் கதை, வசனம் ஆகியவற்றை எழுதிவிட்டு தயாரிப்பாளர் இப்ராஹிமை அணுகியிருக்கிறார். ஆனால் இப்ராஹிமோ “நீங்கள் இத்திரைப்படத்தை இயக்குங்கள். டைட்டிலில் எனது பெயரை போட்டுக்கொள்கிறேன்” என கூறினாராம். அக்காலகட்டத்தில் டி.ராஜேந்தர் தனது கதை படமாவதே பெரிய விஷயம் என்று எண்ணியதால் அதற்கு ஒப்புக்கொண்டாராம். இதனை தொடர்ந்துதான் தயாரிப்பு-டைரக்சன் என்பதில் இப்ராஹிமின் பெயர் இடம்பெற்றிருந்தது.

T.Rajendar
மேலும் அத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தவர் டி.ராஜேந்தர்தான். அத்திரைப்படத்தின் டைரக்சனில் தனது பெயரை விட்டுக்கொடுத்து, அத்திரைப்படத்திற்கு வசனமும், கதையும் பாடல்களும் எழுதி இசையமைத்திருந்த டி.ராஜேந்தர் அத்திரைப்படத்திற்காக வாங்கிய சம்பளம் வெறும் ரூ.1500 தானாம். அந்த தொகையும் கூட அவருக்கு சரியாக தரப்படவில்லையாம். மிகவும் போராடித்தான் அந்த தொகையை வாங்கினாராம் டி.ராஜேந்தர்.
இதையும் படிங்க: கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் விநோத கண்டிஷன் போடும் ஹரீஷ் கல்யாண்… இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல!!