Connect with us
TR

Cinema History

பிரம்மாண்டமான செட் போட்ட தமிழ் சினிமா உலகம்… டி.ராஜேந்தருக்கே முன்னோடி இவங்கதானாம்!

டி.ராஜேந்தரின் படங்கள் என்றாலே நவரசமும் கலந்து இருக்கும். அதனால் அவர் தனது படங்களின் தலைப்பைப் 9 எழுத்துகளில் தான் வைப்பார். அந்த வகையில் என் தங்கை கல்யாணி, உயிருள்ள வரை உஷா, உறவைக் காத்த கிளி, மைதிலி என்னை காதலி, தங்கைக்கோர் கீதம் உள்பட பல படங்களைச் சொல்லலாம். இந்தப் படங்களில் ஏ டூ இசட் எல்லாமே அவர் தான். இந்தப் படங்களின் பாடல்கள் எல்லாமே பிரம்மாண்டமாக செட் போட்டு எடுத்து அசத்தியிருப்பார் டி.ஆர்.

இதையும் படிங்க… கமலின் சூப்பர்ஹிட் படங்களில் நடிக்க மறுத்த சத்யராஜ்… அந்தப் படத்துக்கு மட்டுமாவது ‘ஓகே’ சொல்லியிருக்கலாமே..!

தமிழ்ப்பட உலகில் டி.ராஜேந்தரின் படங்கள் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது பாடல் காட்சிகளில் இடம்பெறும் பிரம்மாண்டமான செட்டுகள் தான். அவரை மாதிரி யாரும் போட முடியாதுன்னு 80ஸ் குட்டீஸ் எல்லாம் சொல்வாங்க. அந்தப் பெருமை அவரையேச் சேரும். ஆனால் இப்படி செட்டுகளைப் போடுவதற்கு அவருக்கு முன்னோடியாக இருந்தவர்கள் யார் யாருன்னு பார்ப்போமா….

தமிழ்சினிமா உலகில் பிரம்மாண்டமான செட்டுகளை முதலில் போட்டு அசத்தியவர் யார் என்றால் எஸ்எஸ்.வாசன். அதற்குப் பின்னால் நாகிரெட்டியார், பி.ஆர்.பந்துலு, ஏ.பி.நாகராஜன் என்று பலர் உள்ளனர். இவர்களுக்குப் பிறகு பாடல் காட்சிகளுக்குப் பிரம்மாண்டமான செட்டுகளைப் போட்டவர் டி.ஆர்.ராமண்ணா. ஆடம்பரமான செட்டுகளை அமைத்து பாடல் காட்சிகளைப் படமாக்குவதில் எனக்கு இவங்க தான் முன்னோடி என்று டி.ராஜேந்தரே சொல்லி இருக்கிறார்.

Rakkozhi Koovaiyile

Rakkozhi Koovaiyile

பாமர மக்களைப் பொருத்தவரை பலரும் அன்றாடம் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு கொஞ்சம் ஓய்வும், சந்தோஷமும் கிடைக்கத் தான் படம் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்கு செட்டுகள் போடப்பட்டு படமாக்கினால் ரொம்பவே ரசிப்பாங்க. அதனால் தான் பாடல் காட்சிகளுக்கு மிகப்பெரிய ஆடம்பரமான செட்டுகளை அமைத்துப் பாடல் காட்சிகளைப் படமாக்கி வருகிறேன் என்று ஒரு பேட்டியில் சொன்னாராம் டி.ஆர்.

மேற்கண்ட தகவலை கேள்வி – பதில் நிகழ்ச்சியில் சித்ரா லட்சுமணன் பகிர்ந்து கொண்டார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top