”நான் கடைசி வரை தமிழன்” படத்திற்கு இசையமைத்துள்ள டி. ராஜேந்தர் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசும் போது எனக்கெல்லாம் எந்த ஸ்டார் பட்டமும் வேண்டாம் என பேசியது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
சூப்பர் ஸ்டார் பட்டம் தொடர்பான பஞ்சாயத்து கோலிவுட்டில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், எந்த நிகழ்ச்சி என்றாலும் ஸ்டார் பட்டம் பற்றி பலரும் பேசி ஸ்கோர் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: எனக்கு எந்த ஸ்டார் பட்டமும் வேணாங்க!.. இப்போலாம் பாட்டா போடுறாங்க.. சும்மா வச்சு செய்த டி. ராஜேந்தர்..
சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் நடிகர் ராகவா லாரன்ஸ் சூப்பர் ஸ்டார் பட்டம் கேட்டாரா விஜய் ஏன் இப்படியொரு பஞ்சாயத்தை கிளப்புறீங்க என பேசி இருந்தார்.
இந்நிலையில், நான் கடைசி வரை தமிழன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டி. ராஜேந்தரும் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளார். மேலும், தான் நம்புவதெல்லாம் 27 நட்சத்திரங்கள் தான் என்றும் ஸ்டார் இல்லாமல் யாரும் வாழ முடியாது என வரிசையாக 27 நட்சத்திரங்களின் பெயர்களையும் தனது அடுக்கு மொழியில் பேசி அடுக்கினார்.
இதையும் படிங்க: மூடு மாறுது.. அத கொஞ்சம் மூடு செல்லம்!. மாராப்ப விலக்கி மனச கெடுக்கும் பிரக்யா…
அதுமட்டுமின்றி தான் எடுத்த எல்லா படங்களுமே 9ம் நம்பர் எண்ணை குறி வைத்தே இருக்கும் என்றும் நியூமராலஜிக்குள்ளும் சென்று ஒரு கலக்கு கலக்கி உள்ளார். மேலும், இப்போ எல்லாம் பாட்டாடா போடுறீங்க என அனிருத்தின் காவாலா பாடலையும் மறைமுகமாக தாக்கிப் பேசுவது போல பாடல்கள் என்றால் ஒரு சிச்சுவேஷன் இருக்கணும் அதற்கு ஏற்ற நல்ல வரிகள் இருக்கணும் என பூக்களைத்தான் பறிக்காதீர்கள்.. காதலரை பிரிக்காதீர்கள் என தான் போட்ட பாடலை பார்த்து விட்டு அந்த படத்திற்கே பூக்களைத்தான் பறிக்காதீர்கள் என டைட்டிலேயே வைத்தார்கள் என மாஸ் காட்டி பேசியுள்ளார்.
Vikram: தமிழ் சினிமாவில்…
கடந்த 14…
Vijay tv:…
Rj Balaji:…
விமர்சனம் செய்வது…