Cinema History
கேவலப்படுத்திய அப்பா!.. ஜெயித்து காட்டிய டி.ஆர்.!.. தாடிக்கு பின்னாலிருக்கும் வெறி!..
தமிழ் சினிமாவில் அந்த காலத்திலேயே யாரிடமும் உதவி இயக்குநராக கூட இல்லாமல் திரைப்படங்களை இயக்கி மிகப்பெரிய இயக்குநராக வலம் வந்தவர் டி. ராஜேந்தர் தான். சினிமாவில் சாதிப்பதற்கு முன்னதாக டி. ராஜேந்தரை அவரது அப்பாவே கேவலப்படுத்தி உள்ளார் என்றும் அதற்கு தக்க பதிலடியை டி. ராஜேந்தர் திருப்பிக் கொடுத்ததாக செய்யாறு பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இயக்கம், இசை, பாடல்களை பாடுவது என சகலகலா வல்லவனாக டி. ராஜேந்தர் இருந்ததால் தான் அவரது மகன் சிலம்பரசனுக்கும் அத்தனை திறமைகளும் இயல்பாகவே வந்தததற்கு காரணம் என்றும் கூறினார். ஒருவரை ஒருமுறை பார்த்து விட்டால் பல ஆண்டுகள் ஆனாலும், பெயருடன் அவரை அப்படியே ஞாபகத்தில் வைத்திருப்பாராம் டி. ராஜேந்தர்.
சாக்கடை அருகே நின்று சினிமா கேட்ட டி. ராஜேந்தர்:
அந்த காலத்தில் ஒரு படத்தின் டிக்கெட் விலை வெறும் 25 பைசா என்றாலும், அது கூட டி. ராஜேந்தரிடம் இருக்காதாம். அதற்காக எம்ஜிஆர், சிவாஜி நடித்த படங்கள் ஓடும் டென்ட் கொட்டாய் பின்னாடி இருக்கும் சாக்கடை கால்வாய்களுக்கு அருகே வந்து நின்று படத்தின் வசனங்களை மட்டுமே கேட்டு திரையில் என்ன காட்சி ஓடும் என்பதை கற்பனை செய்து பார்ப்பாராம் டி. ராஜேந்தர்.
அப்படியெல்லாம் சினிமாவை தனக்குள் செலுத்திக் கொண்ட நிலையில் தான் எந்தவொரு இயக்குநருடனும் உதவி இயக்குநராக பல ஆண்டுகள் பணிபுரியாமல் சொந்தமாகவே திரைப்படங்களை தனது ஞானத்தைக் கொண்டே இயக்கி ஹிட் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து அசத்திய ஜீனியஸ் டி. ராஜேந்தர் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.
கேவலப்படுத்திய தந்தை:
நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது அவரது அந்த தாடியும் அந்த நீண்ட முடியும் தான். டி. ராஜேந்தரின் தாடிக்கு பின்னாடி ஒரு லேடி இருக்கு என்றும் அவரது முதல் காதல் தோல்வியானதால் தான் அப்படி தாடி வைத்துக் கொண்டு திரிந்தார் என ஒரு பக்கம் சொன்னாலும், இன்னொரு பக்கம் டி. ராஜேந்தரை அவரது தந்தை கேவலப்படுத்தியதால் தான் அந்த வைராக்கியத்திற்காகவே தனது தாடியை ஷேவ் செய்யாமல் இருந்து விட்டார் என்றும் கூறுவார்கள் என செய்யாறு பாலு தனது பேட்டியில் இன்னொரு சுவாரஸ்ய தகவலை கூறியுள்ளார்.
நீயெல்லாம் ஷேவ் பண்ணிட்டுப் போய் என்னத்த கழட்டப் போற என டி. ராஜேந்தரின் அப்பா கேட்டதால் தான் சினிமாவில் வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்து பதிலடி கொடுத்தாலும், பல ஆண்டுகள் தனது தாடியை ஷேவ் செய்யாமலே இருந்து தந்தைக்கு தக்க பதிலடி கொடுத்தார் டி. ராஜேந்தர் என்பதும் உண்மையாக கூட இருக்கலாம் என செய்யாறு பாலு சொல்லி உள்ளார்.