Connect with us

பல இடங்களில் அழுது விட்டேன்.. மீண்டும் படம் பார்த்த டி.ஆர். பேட்டி….

tr

Cinema News

பல இடங்களில் அழுது விட்டேன்.. மீண்டும் படம் பார்த்த டி.ஆர். பேட்டி….

நடிக அஜித் பட கெட்டப்புகளில் வந்து அசத்திய திரைப்படம் சிட்டிசன். இப்படத்தை சரவண சுப்பையா என்பவர் இயக்கியிருந்தார். இப்படத்திற்கு பின் அவர் ஏபிசிடி என்கிர படத்தை இயக்கினார். பல வருடங்களு பின் அவர் ‘மீண்டும்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

சிட்டிசன் படத்தை இயக்கிய இயக்குனர் என்பதால் ரசிகர்களிடம் இப்படத்தின் மீது ஒரு எதிர்பார்கு இருக்கிறது. இந்த படத்தில் கதிரவன் என்பவர் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக டிக்கிலோனா பட புகழ் நடிகை அனாகா நடித்துள்ளார்.

meendum

இந்நிலையில், இப்படத்தின் சிறப்பு காட்சியை இயக்குனரும், நடிகருமான டி ராஜேந்தர் பார்த்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் படத்தை வெகுவாக புகழ்ந்து பேசியதாவது:

சரவண சுப்பையா சிட்டிசன் என்ற வெற்றி படத்தை இயக்கியவர் என்பதால் அவருடைய படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. அதே சமயம் ஏன் அறிமுக நடிகர்களை வைத்து படம் எடுக்கிறார் என்ற சந்தேகமும் இருந்தது. படம் பார்த்த பிறகு தான் தெரிகிறது இன்று நடக்கும், இனி நடக்கப் போகிற யுத்தங்களைகளை வைத்து உருவாக்கி உள்ளார்.

meendum

இந்த கொரானா, சுனாமி போன்றவை எப்படி எதிர் நாடுகளால் உருவாக்கப்பட்டதோ அது போன்று கதைக்களத்தை வைத்து இந்த படத்தை இயக்கியுள்ளார். அப்பாவாக நடித்துள்ள கதிரவன் மற்றும் அவருக்கு மகனாக நடித்துள்ள அவருக்கும் இடையேயான ஆழமான அன்பு மற்றும் நட்பு உருக வைக்கிறது. அதைப்போல் கதாநாயகி கணவர் மற்றும் இன்னொருவர் மீதும் பாசம் வைத்துக் கொண்டு எப்படி வாழ்வது என தெரியாமல் தவிர்ப்பது மிகவும் யதார்த்தமான உள்ளது. அற்புதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அந்த காட்சிகளை பார்க்கும் போது அந்த பெண் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் பரிதாபம் எழுகிறது. படத்தைப் பார்க்கும் போது பல இடங்களில் என்னுடைய கண்கள் குளமாகி விட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிறிய பட்ஜெட்டில் ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி கிடைத்துள்ளது.

meendum

இந்த படத்தை மக்களாகிய நீங்கள் தான் ரசித்து வெற்றி பெற வைக்க வேண்டும். பெண் ஹிட்லர் போல நடித்துள்ள சுபாவின் நடிப்பு பயமுறுத்துகிறது. சரவண சுப்பையா ஒரு இயக்குனராக மீண்டும் அவருடைய அடையாளத்தை மிகச்சரியாக செய்திருக்கிறார். நாயகனாக நடித்துள்ளவரை நிர்வாணமாக்கி எடுத்த காட்சிகள் பதைபதைக்க வைக்கிறது. எப்படி எடுத்தார் என யோசிக்க கூட முடியவில்லை. அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்துள்ளார். படத்தில் பார்க்கும்போது அவர் உயிருடன் மீண்டு வந்துவிடுவார் என்ற ஏக்கம் எழுகிறது. ஹாலிவுட் படத்தைப் பார்த்த அளவிற்கு பிரம்மிப்பாக உள்ளது. கத்தி மேல் நடிக்கும் வித்தையை இந்த படத்தில் பார்த்தேன்.

tr3

கதிரவன் அந்த கதாபாத்திரமாகவே மாறி மிகச் சிறப்பாக நடித்துள்ளார். அனகா என்ற பெண் அவருடைய நவரசத்தால் கவர்கிறார். பெண்கள் அமைப்பினர் இரண்டு கணவன் ஒரு மனைவியா என இந்த படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியதை கேள்விப்பட்டேன். அது போன்ற காட்சிகளை இந்த படத்தில் எடுத்து இருப்பது உண்மைதான். ஆனால் அதனை மிகவும் நாசுக்காக, ஒரு பெண் தடுமாறும் சூழலை அழகாக கையாண்டு இருக்கிறார்கள். இன்று இதை விவாதப் பொருளாக மாறி இருந்தாலும் இன்றைய சூழலில் நடக்கும் உண்மையை தான் படத்தில் கூறியுள்ளார் என பேசியுள்ளார்.முள் மேல் நடக்கும் யுக்தி, விஞ்ஞானமும் குடும்பமும் கண்களை கலங்கடிக்கிறது.

என அவர் மீண்டும் படத்தை பாராட்டினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top