சிம்பு அப்படி செஞ்சதுல எந்த தப்பும் இல்லை… பிள்ளைக்கு சப்போர்ட்டுக்கு வரும் டி.ஆர்… அப்பான்னா இப்படில இருக்கனும்!!
தற்போது “Atman” ஆக திகழ்ந்து வரும் சிலம்பரசன் டி.ஆர், ஒரு காலகட்டத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையாகவும் இளம் பெண்களின் கனவு கண்ணனாகவும் வலம் வந்தார். இப்போதும் கூட அவரை ரசிக்கும் இளம் பெண்களும் உண்டு.
சிம்புவும் நயன்தாராவும் ஜோடியாக இணைந்து நடித்த “வல்லவன்” திரைப்படத்தின் போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. பல மாதங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
அதன் பின் நடிகை ஹன்சிகா மோத்வானியை காதலித்து வந்தார் சிம்பு. எனினும் அந்த காதலுக்கும் விரிசல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து சிம்பு காதல் தோல்வியால் இமய மலைக்குச் சென்று சாமியாராக ஆகப்போவதாக கூறிவந்தார். இது போன்ற போக்குகளால் அவரது கேரியரில் கவனம் குறைந்தது.
சிம்பு கேரியரே முடிவுக்கு வந்துவிட்டது என்று பல பத்திரிக்கைகள் எழுதின. ஆனால் யாரும் எதிர்பாராவிதமாக தனது உடலை மீண்டும் கட்டுக்கோப்பாக கொண்டு வந்து “மாநாடு” திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் சிம்பு.
இந்த நிலையில் சிம்புவின் காதல் குறித்து பல செய்திகள் வெளிவந்த காலகட்டத்தில் ஒரு பேட்டியில் அவரது தந்தையான டி.ராஜேந்தர் ஒரு சுவாரஸ்யமான பதிலை கூறியிருக்கிறார். அவர் அப்படி என்ன கூறினார் என்பதை இப்போது பார்க்கலாம்.
“என்னுடைய பையனை பொறுத்தவரை அவர் திருமண வயதில் இருக்கிறார். ஒரு பெண்ணை காதலித்து கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் என நினைக்கிறார். சிம்பு சினிமாத் துறையைச் சேர்ந்தவராக இருப்பதினால் சினிமாத்துறையைச் சேர்ந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ளவேண்டும் என அவர் நினைக்கிறார்.
இதில் அப்படி என்ன தவறு இருக்கிறது. அவருடைய போக்கு எனக்கு நியாயமாக தெரிவதினால்தான் அவரது காதலை குறித்து நான் விமர்சித்ததே இல்லை” என டி.ராஜேந்தர் பதிலளித்திருக்கிறார்.
இதையும் படிங்க: ஒரு பொறுப்புள்ள இயக்குனர் இப்படி பண்ணலாமா?… மிஷ்கினை விளாசி தள்ளிய பிரபல தயாரிப்பாளர்…