டி.ஆரின் ஒரு தலை ராகம் படத்துல இதையெல்லாம் கவனிச்சிருக்கீங்களா... சுவாரஸ்ய தகவல்கள்!

by Akhilan |   ( Updated:2022-10-15 04:32:32  )
டி.ராஜேந்திரன்
X

டி.ராஜேந்திரன்

இயக்குநர் டி.ராஜேந்தரின் திரைப்பயணத்துக்குத் தொடக்கப் புள்ளியாக அமைந்த ஒரு தலை ராகம் படத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.

பொதுவாக டி.ஆரைப் பொறுத்தவரையி கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு, வசனம் என பல துறைகளில் வித்தகர். அவரின் பெரும்பாலான படங்களில் இந்தத் துறைகளை எல்லாம் அவரே கவனித்துக் கொள்வது வழக்கம். ஆனால், ஒரு தலை ராகம் படத்தில் இயக்கம் என்கிற இடத்தில் தயாரிப்பாளர் இப்ராஹிமின் பெயர் இடம்பெற்றிருக்கும்.

ஒரு தலை ராகம்

ஒரு தலை ராகம்

படத்தை இயக்கியவர் டி.ஆர் என்று அப்போது ஒரு தகவல் வெளியானது. ஆனால், மாயவரம் என்கிற சிற்றூரில் இருந்து வந்து சினிமாவில் எப்படியாவது கால்பதிக்க வேண்டும் என்கிற தணியாத தாகத்தோடு இருந்த டி.ராஜேந்தர் என்கிற இளைஞனுக்கு அப்படி ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தால் நிச்சயம் அவருக்கு வேறு வழி இருந்திருக்காது என்பதுதான் உண்மை.

பின்னணி இசை என்கிற இடத்தில் ஏ.ஏ.ராஜூவின் பெயர் இடம்பெற்றிருந்தது. அந்த வகையில் இசையமைப்பாளர், கதை, திரைக்கதை வசனம் என்கிற இடத்தில் டி.ஆரின் பெயர்தான் இருந்தது. படம் 1980-ம் ஆண்டு வெளியாகி ஆரம்பத்தில் சரியாகப் போகவில்லை.

ஆனால், டி.ஆரின் இசையில் இடம்பெற்றிருந்த வாசமில்லா மலரிது, என் கதை முடியும் நேரமிது, கூடையிலே கருவாடு உள்ளிட்ட பாடல்கள் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெறவே பாடல்களுக்காகவே படம் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

கல்லூரி காலங்களில் டி.ராஜேந்தர் ரயிலில் பயணிக்கையில் தானே மெட்டமைத்து பாடல்களைப் பாடுவதை வழக்கமாக வைத்திருப்பாராம். அவரது பாடல்களைக் கேட்டு ரயிலில் உடன் பயணிப்பவர்கள் மனதை லயித்திருப்பார்களாம். கூடையிலே கருவாடு போன்ற பாடல்கள் அப்படி உருவானவைதான். அதேபோல், எம்.ஜி.ஆர், சிவாஜி காலத்தில் முன்னணி பிண்ணனி பாடகராக இருந்த டி.எம்.சௌந்தர்ராஜனுக்கான வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கியிருந்தது.

ஒரு தலை ராகம்

ஒரு தலை ராகம்

அந்த நேரத்தில் அவரது குரலில் ஒலித்த, என் கதை முடியும் நேரமிது பாடல் அவரது பயணத்தைப் பற்றியும் பாடுவதுபோல் அமைந்தது. அதேபோல், மலையாளப் பாடகரான ஜெயச்சந்திரன் பாடிய ஒரே தமிழ் பாடல் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த கடவுள் வாழும் என்கிற பாடல்தான். தலைப்பைப் போலவே ஒரு தலைக் காதலைப் பற்றி பேசும் இந்தப் படத்தில் அனைத்து பாடல்களையும் ஹீரோ சங்கரே பாடுவது போல் இடம்பெற்றிருக்கும். அதேபோல், பெண் குரலே இந்தப் படத்தின் பாடல்களில் பயன்படுத்தப்படவில்லை என்பது ஆச்சர்யமான தகவல்.

Next Story