Connect with us

Cinema History

அப்படி சொல்லாதீங்க அண்ணே… கமலின் வார்த்தையால் கண் கலங்கி போன டி.ராஜேந்திரன்!

தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட் செய்து கலக்கிய நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் டி.ராஜந்திரன். சோகமான க்ளைமேக்ஸ் வைத்தாலும் கூட படம் பெரும் ஹிட் அடிக்கும் என்றால் அது டி.ராஜேந்திரன் அவர்கள் திரைப்படத்தில்தான் நடக்கும்.

திரையுலகில் பெரும் பெரும் நடிகர்களே சோக முடிவுகளை வைக்க பயப்படும்போது அதையே ஒரு ட்ரெண்டாக உருவாக்கியவர் நடிகர் டி.ராஜேந்திரன். ஒரு பேட்டியில் டி ராஜேந்திரிடம் உங்களுக்கு எந்த நடிகர்களை பிடிக்கும் என கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கும்போது நான் எம்.ஜி.ஆர் சிவாஜியை பார்த்து வளர்ந்தவன். அவர்கள் இருவரையுமே எனக்கு மிகவும் பிடிக்கும். எம்.ஜி.ஆர் ஒரு வகையான நடிப்பை வெளிப்படுத்துகிறார் என்றால் சிவாஜி ஒரு வகையான நடிப்பை வெளிப்படுத்துவார்.

அதற்கு பிறகு எனக்கு பிடித்த நடிகர்கள் என்றால் அது ரஜினி மற்றும் கமல்ஹாசன்தான். முக்கியமாக நான் கமல்ஹாசனுக்கு மிகப்பெரும் ரசிகனாக இருந்துள்ளேன். அவர் கட்சி துவங்கியபோது இனி நடிக்க மாட்டேன் என கூறினார்.

அதை கேட்டதும் எனக்கு வருத்தமாகிவிட்டது. உடனே கமல்ஹாசனை நேரில் சந்தித்தேன். அவரிடம் நீங்க கட்சி துவங்குங்க அண்ணா அது தப்பில்லை. அதுக்காக நடிக்க மாட்டேன் என சொல்லாதீர்கள் என கூறி அழ துவங்கிவிட்டேன். பிறகு என்னை கமல்ஹாசன் சமாதானப்படுத்தினார்” என கூறியுள்ளார் டி.ஆர். மேலும் தற்சமயம் கமல் விக்ரம் திரைப்படத்தில் மாஸ் ஹிட் கொடுத்ததையும் பாராட்டி பேசியிருந்தார் டி.ஆர்.

google news
Continue Reading

More in Cinema History

To Top